சமந்தாவின் உடல்நிலையில் தீடீர் பின்னடைவு!..அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!.

by Rohini |   ( Updated:2022-11-24 04:10:13  )
sam_main_cine
X

samantha

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடியில் ஆரம்பித்த தன் தமிழ் சினிமா பயணத்தை வெற்றிகரமாக கடந்து இன்று மக்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார்.

sam1_cine

samantha

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கலக்கி வரும் நடிகை சமந்தா பல முன்னனி நடிகர்களோடு சேர்ந்து தன் பங்களிப்பை நன் முறையில் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

sam2_cine

smantha

அந்த படத்தின் படப்பிடிப்பு பாதி நாள்கள் கடந்த நிலையில் அவர் மையோசைட்டிஸ் என்ற சரும நோயால் பாதிக்க பட்டு வந்தது தெரியவந்தது. ஏற்கெனவே அதற்கான சிகிச்சைகள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அந்த நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

sam3_cine

samantha

இதனால் குஷி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனிடையே உடல் நலம் தேறி வந்த நிலையில் யசோதா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இப்போது நான் நலமாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு ஆதரவு கூறினார்.

sam4_cine

samantha

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால் மீண்டும் அந்த சரும நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாராம். அதனால் நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் சமந்தா.

Next Story