OTT actors: ஒருநேரம் திரையரங்கில் ஒரு படத்தினை தவறவிட்டால் அந்த படத்தினை டிவியில் போடும்வரை நாம் காத்திருக்க வேண்டும். அதோடு ஒரே ஜானரில் தான் படங்களும் இருக்கும். எப்பொழுதாவது ரொமான்ஸ், ஹாரர் படங்கள் வெளியாவதுண்டு.
நமக்கு பிடித்த படத்தினை டிவியில் பார்ப்பதற்கும் நாம் பல்வேறு அமில சோதனைகளை கடக்க வேண்டும். படத்திற்கு விளம்பரமா? இல்லை விளம்பரத்திற்கு படமா? என பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு படத்தின் நீளம் குறைத்து விளம்பரங்கள் அதிகம் வெளியிடப்படும்.
அதிலும் சில டிவி சேனல்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என மொக்கை காரணம் சொல்லி, படத்தின் ரொமான்ஸ் காட்சிகளை வெட்டி எறிந்து விட்டு படத்தினை ஒளிபரப்புவர். தற்போது இந்த அவஸ்தைகள் எல்லாம் இல்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு ஓடிடி தளங்களில் நமக்கு பிடித்த படம், நாடகத்தினை பார்த்து ரசிக்க முடிகிறது.
ஓடிடிகளின் அசுர வளர்ச்சியால் திரையரங்குகளே வரும் நாட்களில் காணாமல் போகலாம் என தெரிகிறது. அந்தவகையில் ஓடிடி தளத்தில் இந்தியாவின் உச்சபட்ச சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா திகழ்கிறார். சமீபத்தில் வருண் தவானுடன் சமந்தா இணைந்து நடித்த ‘சிட்டாடல் ஹோனி பன்னி’ சீரிஸ் அமேசான் தளத்தில் வெளியாகி வரவேற்பினை பெற்று வருகிறது.
இதில் நடிக்க சமந்தா ரூபாய் 10 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். கடந்த 2 வருடங்களாக படங்கள் ஓடாதது, சொந்த வாழ்க்கை பிரச்சினை, உடல்நல பிரச்சினை ஆகியவற்றால் நொந்து போயிருந்த சமந்தா இந்த தொடரின் மூலம் மீண்டும் ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் நடித்தாலும் ஒரு பக்கம் தொடர்ந்து சினிமாவில் சமந்தா நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Nepoleon: ஆறு மாதம் கழித்து தனுஷுக்கு ‘மீண்டும்’ திருமணம்?
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…