சமந்தாவிற்கு ஏற்பட்டது உண்மையில் பெரும் அநீதி
மாதர் தம்மை அழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் என்றார் பாரதியார். அது நடிகை சமந்தாவிற்கு நிச்சயம் பொருந்தும். நடிப்பில் சாதித்த நடிகையான சமந்தா, ஹைதராபாத்தில் பெரும் பாரம்பரிய திரை குடும்பமான நாகர்ஜுனாவின் குடும்பத்தில் மருமகளானார். நடிகர் நாகர்ஜூனாவின் இரண்டாவது மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்தார்.
சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் உறவில் விரிசல் விழுந்தது. அதன்பிறகு முறைப்படி விவகாரத்து செய்யப்போவதாக அறிவித்து பிரிந்துவிட்டார்கள். ஆனால் இடையில் சமூக வலைதளங்களில் நடந்த விஷயங்கள் அருவருப்பின் உச்சம். சமந்தாவிற்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல், குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பல கோடி பணம் கேட்டார் என்று கண் காது மூக்கு வைத்து வதந்தியை பரப்பின சமூக ஊடகங்கள்.
அதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் வதந்தியை அப்படியே சில ஊடகங்கள் வீடியோவாக போட்டு காசு பார்த்தன சில யூடியூப் சேனல்கள். ஏனெனில் நடிகைகளின் அந்தரகங்கள், அவர்களை பற்றி கிகிகிசுக்காக நிறைய மவுசு உள்ளதால் ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டின.
இந்த ஆர்வம் உண்மையில் சமந்தாவை பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது. ஒரு நடிகையாக என்று பார்க்காமல், ஒரு பெண்ணாக பார்த்தால் சமூக ஊடகங்களில் சமந்தாவிற்கு நிகழ்ந்தது ஒரு வகையில் வன்முறை தான். இது உண்மையில் தவிர்க்கப்பட வேண்டியது. ஒரு பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் எண்ணம் இருக்கும் வரை இந்த வன்முறை தொடரத்தான் செய்யும் என்பது கசப்பான உண்மை.