சமத்தா சோபாவுல!.. சமந்தா என்ன பண்றாரு பாருங்க.. இப்போ எல்லாம் அந்த வேலையை இவரே பார்க்குறாரா?..

by Saranya M |   ( Updated:2024-02-13 10:45:51  )
samantha
X

samantha

நடிகை சமந்தா சோபாவில் அமர்ந்து கொண்டு டப்பிங் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்துக்கான டப்பிங் பேசுகிறாரா? அல்லது ஆடியோ புக்ஸுக்கு ஏதாவது குரல் கொடுக்கிறாரா என ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.

சர்வதேச அளவில் பிரபலமான பாட் காஸ்ட் சேனலான Take 20ல் தான் சமந்தா பேசியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டேன்னு பில்டப் பண்ணாங்களே!.. கடைசியில் SK 23 ஹீரோயின் யாரு தெரியுமா?..

சினிமாவிலேயே நடிகை சமந்தா சொந்தக் குரலில் டப்பிங் பேசாமல் இருந்து வந்தார். ஆனால், சிட்டாடல் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார் சமந்தா.

நடிகை சமந்தாவின் இந்த புது ரூட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சர்வதேச திரைப்படம் ஒன்றில் கமிட்டான சமந்தா அந்த படத்தின் சூட்டிங்கை முடித்தாரா? இல்லையா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் கனிகா!.. போட்டோஸ் ஒவ்வொன்னும் அள்ளுது!..

உடல்நலக்குறைவு காரணமாக பல பட வாய்ப்புகள் சமந்தாவுக்கு மிஸ் ஆன நிலையில், மீண்டும் பாலிவுட்டில் பல தயாரிப்பு நிறுவனங்கள் கதவை தட்டி நான் நடிக்க ரெடி, நீங்க என்ன காஸ்ட் பண்ண ரெடியா என கேட்டு வருகிறாராம் சமந்தா எனக் கூறுகின்றனர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கூடிய விரைவிலேயே வருண் தவான் மற்றும் சமந்தா நடித்து உருவாகி உள்ள சிட்டாடல் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

Next Story