இயக்குனரை அப்புறம் ஃபிக்ஸ் பண்ணுங்க.. ‘தளபதி 69’ படத்தின் ஹீரோயின் இவங்கதான்பா
Thalapathy 69: விஜயின் கெரியரில் தளபதி 69 படம் தான் கடைசி படமாக இருக்கப் போகிறது. அதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். இப்போது விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் விஜயின் 69வது படத்தை இயக்கப் போவதுயார் என கோடம்பாக்கத்தில் ஒரே சலசலப்பு இருந்து வருகிறது. ஏனெனில் விஜயின் கடைசி படம் என்பதாலும் சீக்கிரம் அந்தப் படத்தை முடிக்க வேண்டியிருப்பதாலும் அரசியல் பேசும் படமாக இருக்க வேண்டுமென்பதாலும் அதற்கேற்ற இயக்குனரை படக்குழு தேடி வருகிறது. அந்த லிஸ்ட்டில் கார்த்திக் சுப்பாராஜ், ஆர்.ஜே.பாலாஜி, அட்லீ, எச்.வினோத் போன்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றன.
இதையும் படிங்க: சித்தர் மனநிலையில் கண்ணதாசன் எழுதிய அற்புத வரிகள்!.. எம்.ஜி.ஆருக்கு ஒரு தத்துவ பாடல்!..
இதில் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் பெயரும் இடம்பெற்றிருந்தது. முதலில் விஜயின் 69வது படத்தை லலித் தயாரிக்க போவதாகவும் எச்.வினோத்தான் இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒரு பத்து நாள்களுக்கு முன்பு அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஒரு உறுப்பினர் ஆகியோர் விஜயை பார்க்க சென்றார்களாம். விஜய் 69வது படத்தை அட்லீ இயக்க வாய்ப்பிருப்பதாக இப்போது கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்றும் ஷாரூக்கான் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதை பற்றி அட்லீ ஷாரூக்கானிடம் பேசி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த தகவல் எந்தளவுக்கு அதிகாரப்பூர்வமானது என விஜய் தரப்பில் இருந்து வந்தால்தான் உறுதியாகும் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். ஆனால் இன்னும் ஓரிரு நாள்களில் விஜய் 69வது படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கமல் எடுத்த விடாமுயற்சி… ரஜினி வைத்த விக்… விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… இயக்குனர் சொல்லும் சுவாரசியங்கள்!