Connect with us
saravana store

அமீர் கான் வீட்டு பார்ட்டியில் நாகசைதன்யாவுடன் சாய் பல்லவி!

samanthadp

Uncategorized

அமீர் கான் வீட்டு பார்ட்டியில் நாகசைதன்யாவுடன் சாய் பல்லவி!

தெலுங்கு, தமிழ் சினிமாவில் நாகசைதன்யா சமந்தாவின் விவாகரத்து விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. சமந்தா தி பேமிலி மேன் தொடரில் மோசமான காட்சிகளில் நடித்ததால் அவரை அக்கினேனி குடும்பம் எச்சரித்ததாகவும் அதை கேட்காத சமந்தா விவகாரத்து வரை சென்றதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அதிலும் சமந்தா கணவர் நாகசைதன்யா குடும்பத்தினர் தனக்கு 50 கோடி ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என கெடுபிடியாக கூறியதாகவும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து நேற்று நாகசைதன்யா வெறும் வந்தந்தி என கூறி விவாகரத்துக்கு செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் நாகசைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் பார்ட்டி வைத்துள்ளார். அதில் சாய்பல்லவி, நாகசைதன்யா, நாகார்ஜூனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

samantha-5

naga saithanya sai pallavi

நாகசைதன்யா அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சமந்தா இல்லாதது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. என்ன தான் லவ் ஸ்டோரி படத்தின் வெற்றியை கொண்டாடினாலும் கட்டின மனைவி இல்லாமலா என முணுமுணுக்கிறது டோலிவுட்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top