சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து : முதன்முறையாக வாய் திறந்த நாகர்ஜுனா!
X
கடந்த வருடம் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தனர். இது இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரும் இது குறித்து அறிக்கை ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தனர்.
சமந்தா சில இடங்களில் தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார். ஆனால், நாகசைதன்யா அவ்வளவாக எங்கும் தனது விவாகரத்து குறித்து பேசியதில்லை. இந்நிலையில், முதன்முறையாக நாகர்ஜுனா இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.
அதாவது, நாகசைதன்யா விவாகரத்து விஷயத்தில் மிகவும் கவனமுடன் அமைதியாக இருந்ததாகவும், அது தனக்கு பெருமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், நான் அவரை குறித்து கவலைப்பட்டதை விட அவர் தான் என்னை குறித்து அதிகம் கவலைப்பட்டார் எனவும் கூறியுள்ளார்.
Next Story