Connect with us

Cinema News

உங்களுக்கு வேற டைட்டில் கிடைக்கலையா.?! சமந்தாவின் செயலால் நொந்து போன விஜய் ரசிகர்கள்.!

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய மோஸ்ட் சென்சேஷனல் நாயகி என்றால் அது சமந்தா தான். இவர் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினாலே அது வைரல் தான். அந்தளவுக்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அதற்கு சிறந்த உதாரணமே சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஊ சொல்றியா பாடல் ஆட்டம் தான்.

அதனை தொடர்ந்து அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா-வாக ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததற்கு பிறகு, முழுக்கவனத்தையும் சினிமாவின் பக்கம் திருப்பி, கதை கேட்டு நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன் – சரி சரி நீங்க முதலில் நிறுத்துங்க.., கமல் முன்னாடியே கோபப்பட்ட விஜய் சேதுபதி.!

அப்படி தான் சமந்தா, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்க்கு குஷி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த கோலிவுட் விஜய் ரசிகர்கள், குஷி படத்திற்கு என தற்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த திரைப்படம் தற்போது வரை விஜய் கேரியரில் முக்கிய படமாக இருகிறது. இதனை கருத்தில் கொண்டு, அந்த படத்திற்கு கலங்கம் வராமல் எடுத்துவிடுங்கள் என கூறி வருகின்றனர்.  மேலும் சமந்தா நடிக்க உள்ள குஷி திரைப்படம் தமிழில் வெளியான ரோஜா படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top