தமிழுக்கு அப்புறம்தான் எல்லாம்...வெளியான சமந்தாவின் புதியபட அப்டேட்.....

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபகாலமாக பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது அதில் இருந்து விலகி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை படத்திலும் தெலுங்கில் சகுந்தலம் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சகுந்தலம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படங்களை தொடர்ந்து சமந்தா ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்பட்டது. எனவே சமந்தா பாலிவுட் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா நடிக்க உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

samantha
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக புரொடக்ஷன் 30 என பெயரிட்டுள்ளனர். விரைவில் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த சமந்தா தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.