சமந்தா மீது இப்படி ஒரு பழியா?.. என்ன இருந்தாலும் பொது மேடையில் இப்படி பண்ணியிருக்க கூடாது..

Published on: April 16, 2023
sam
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.அனைத்து முன்னனி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த சமந்தா இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியானது ‘சகுந்தலம்’ திரைப்படம். இந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சமந்தாவை பற்றி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அதாவது அவர் மையோசிட்டிஸ் என்ற தோல் நோயால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்தார். ஓரளவுக்கு நோய் குணமடைந்ததும் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனாலும் அந்த நோயிலிருந்து முழுவதுமாக சமந்தா குணமடையவில்லை.

மீண்டும் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இதை குறிப்பிட்டு சகுந்தலம் பட புரோமோஷன்களில் கலந்து கொண்டு பேசிய சமந்தா பொது மேடைகளில் அழவும் செய்தார். அதை பார்த்த சமந்தா ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆதரவு கரம் கொடுத்தனர்.

இந்தச் சம்பவம் தான் இப்போது சமந்தாவிற்கே பெரிய ஆப்பாக மாறிவிட்டது. அதாவது மேடையில் அழுது ரசிகர்களை கவரும் சமந்தா என்றும் சிம்பதி ஸ்டார் சமந்தா என்றும் ஹேஷ் டேக் ஆரம்பித்து நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதை பற்றி வலைப்பேச்சு அந்தனனும் ஒரு தகவலை பகிர்ந்தார்.

எல்லாருக்கும் வலி இருக்கத்தான் செய்யும் என்றும் அதை பொது மேடையில் சமந்தா காட்டியது தவறு என்றும் கூறிய அந்தனன் இதே நிலைமை தான் விஷாலுக்கும் என்றும் கூறினார். ஆனால் இதுவரை தன் சொந்தப் பிரச்சினையை விஷால் என்றைக்கும் மேடையில் பேசி வருத்தப்பட்டது இல்லை என்றும் தன் வேலையிலேயே கவனமாக இருக்கிறார் என்றும் அவரை மாதிரி சமந்தா இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். விஷாலுக்கு இல்லாத பிரச்சினையே இல்லை, உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதை பற்றி எப்பவுமே அவர் சொன்னதில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க : ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்கு போட்டியாக கண்ணதாசன் தயாரித்த படம்!.. சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த நடிகர்?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.