அழகா இல்லனு சொன்னாங்க!.. அப்படி இருக்கும் போது நான் பார்த்த படங்கள்.. கம்பேக் கொடுத்த சமந்தா..
தமிழ் சினிமாவில் அழகான முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது இவரது நடிப்பில் சாகுந்தலம் படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. டிஸ்னியை கவர் பண்ணி எடுத்திருக்கும் இந்தப் படத்தில் சமந்தா முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டு சமந்தா மீடியாக்களின் பார்வையில் தோன்றியிருக்கிறார். கடும் ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா ஒரு விடா முயற்சியில் தான் மீண்டும் சினிமாவிற்குள் களமிறங்கியிருக்கிறார். மேலும் சமந்தா பல பேட்டிகளில் தன்னுடைய நோயை பற்றியும்
அந்த நேரத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகளை பற்றியும் தைரியமாக பேசியிருக்கிறார்.
அதாவது அவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது மிகவும் கோபத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாராம். ஏனெனில் நல்ல உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மேற்கொண்ட போதும் ஏன் தனக்கு இந்த நோய் ஏற்பட்டது என்பதை எண்ணும் போது மிகவும் விரக்தியில் இருந்ததாக கூறினார் சமந்தா. அதுமட்டுமில்லாமல் செய்திகளிலும்
சமூக ஊடகங்களிலும் சமந்தாவின் அழகு முன்பு மாதிரி இல்லை என்றும் மிகவும் மோசமாக இருக்கிறார் என்றும் பல விமர்சனங்கள் வந்ததை பார்க்கும் போது தனக்கு கோபம் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஏனெனில் வெளி அழகை விட உள்ளத்தால முன்பை விட தைரியமாகவும் அழகாகவும் மாறிவிட்டேன் என்று தன் மனதின் நிலையை பற்றி கூறினார். மேலும் சாகுந்தலம் படத்தில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என கேட்டதற்கு சமந்தாவிற்கு டிஸ்னி சார்ந்த படங்கள் மீது அதீத விருப்பமாம்.
இதையும் படிங்க : அனிருத்திற்கு தடை போட்ட அப்பா!.. டெரர் பேர்வழியா இருப்பார் போலயே?..
கோபமாக இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும் போதும் எரிச்சலாக இருக்கும் போதும் எந்த மன நிலையில் இருந்தாலும் டிஸ்னி படங்களை தான் விரும்பி பார்ப்பராம் சமந்தா. அதன் காரணமாகவே இந்த படத்திலும் விலங்குகள் கூட நடிக்க வேண்டும் என்று சொன்னதும் சரி சொல்லிவிட்டேன் என்று கூறினார்.