இப்படி ஒரு விருதா..? மகிழ்ச்சியில் தெறி பேபி..! ஆரவாரத்தில் ரசிகர்கள்...
தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. சின்ன சின்ன ரோலில் தனது முகத்தை காட்டிய இவர் பாணாகாத்தாடி மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. பல முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார்.
விஜயுடன் தொடர்ந்து மூன்று படங்கள் ஹிட் கொடுத்தார். இது மட்டுமில்லாமல் பிற மொழிப்படங்களிலும் தனது வெற்றியைப் பதித்தார். சமீபத்தில் இவர் ஆடிய ஊ சொல்றியா பாடலால் ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்ப பார்க்க வைத்தார்.
இவர் திரையுலகிற்கு வந்து 12 வருடங்கள் ஆன நிலையில் ஏற்கெனவே தனது இன்ஸ்டா பக்கத்தில் " கேமரா, ஆக்ஷன் மற்றும் ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி 12 வருட நினைவுகள் ஆகின்றன. இந்த பொக்கிஷமான பயணத்தையும், உலகின் சிறந்த, விசுவாசமான ரசிகர்களையும் பெற்றதற்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது ரசிகர்களுடன் மற்றொரு நல்ல செய்தியையும் பகிர்ந்துள்ளார். "தெலுங்கானா அரசாங்கத்தால் மாநிலத்தில் தனது சிறப்பான பணிக்காக சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் விருதைக் கொடுத்துள்ளது" என்று அந்த பதிவில் குறிப்பிட்டு போட்டோவையும் போட்டுள்ளார். மென்மேலும் விருதுகள் வாங்க அம்மணியை வாழ்த்துவோம்.