நீ எப்படி போஸ் கொடுத்தாலும் அழகுதான்... மனதை கொள்ளையடித்த சமந்தா...

samanthaaa
பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. சமீபத்தில் கணவரை பிரிந்த அவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வைரல் ஹிட் ஆகி மேலும் பிரபலமாகியுள்ளார்.
தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார்.

samantha
மேலும், The family man 2 படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸிலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரை பற்றி எந்த சர்ச்சை செய்திகள் வெளியானலும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பார். டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

samantha
ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீபகாலமாக அவர் காட்டு கவர்ச்சி ஓவர் டோஸாக இருக்கிறது.
இந்நிலையில், அவரின் அழகான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.