முன்னாள் கணவர் பற்றிய கிசு கிசு... ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சமந்தா.!
சினிமா திரை உலகில் காதல், திருமணம், விவாகரத்து என்பது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தற்போது வரை ரசிகர்களால் இன்னும் நம்ப முடியாததாகவும், பேசப்படக்கூடியதாகவும் இருக்கும் காதல், கல்யாணம், விவாகரத்து என்றால் அது நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையேயான உறவு தான்.
இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே இவர்கள் தங்களுக்குள் இது சரிப்பட்டு வராது என்று மனம் ஒத்து பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் இருவரும் தங்களது சினிமா வாழ்க்கையில் மிகவும் மும்முரமாக இயங்கி வந்தனர். இதில் அண்மையில் நாகசைதன்யா ஓர் முன்னணி இளம் ஹீரோயினுடன் டேட்டிங் சென்றுள்ளார். அவருடன் தற்போது காதல் வலையில் இருக்கிறார் என்றவாறு கிசு கிசுக்கள் எழுந்து வந்தன.
இதுகுறித்து ஓர் இணைய வாசி அவரது டுவிட்டர் பக்கத்தில், இது எல்லாம் சமந்தாவின் குரூப் செய்கிற வேலை. நாக சைதன்யா பற்றி பல வதந்திகள் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த சமந்தா கடுப்பாகிவிட்டார்.
இதையும் படியுங்களேன் - விஜயகாந்த் காலில் விரல்கள் அகற்றம்.! எங்க கேப்டனுக்கு என்னதான் ஆச்சி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்...
அதற்கு பதிலளித்த சமந்தா, ஓர் பெண்ணை பற்றி அவதூறு வந்தால், அது முழுக்க முழுக்க உண்மை. அதுவே ஒரு ஆணை பற்றி வதந்தி வந்தால், அது பெண் ஏற்படுத்திய வதந்தி. வளருங்கள் நண்பரே. நீங்களும் முன்னேறுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்துங்கள். என பதிவிட்டு இருந்தனர்.
Rumours on girl - Must be true !!
Rumours on boy - Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022