மீண்டும் பழைய நிலையில் சமந்தா: என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்க..

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நடிகை சமந்தா 'மாஸ்க்கோவின் காவிரி' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
இதையடுத்து பல படங்களில் நடித்த இவர் அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக உள்ளார். தமிழைப்போலவே தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
இவர் கடந்த 2017ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பு வரை சமூக வலைத்தளங்களில் தனது பெயரை சமந்தா ரூத் பிரபு என வைத்திருந்த இவர் திருமணத்திற்குப் பின் சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது. இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருந்துவந்த அவர் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் தானும் தனது கணவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.
இது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா உலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விவாகரத்துக்குப் பின் அவரது கணவர் நாகசைதன்யா கொடுத்த ஜீவனாம்சம் 200 கோடி ரூபாய் பணத்தையும் வேண்டாம் என்று கூறிவிட்டார். இவரது விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கதைகள் வலம்வரத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அதவாது விவாகரத்து பேச்சு அடிபடத் தொடங்கியதிலிருந்து சமூக வலைத்தளத்தில் தனது பெயரை 'S' என மாற்றிக்கொண்டார். நேற்று தனது பிரிவை அறிவித்த பின்னர் தற்போது தனது பெயரை சமந்தா என மாற்றிக்கொண்டார்.