Connect with us

சமந்தாவுக்கு முன்னாள் கணவரின் ஞாபகம் வருகிறது போல… என்ன செய்துள்ளார் பாருங்க…

Cinema News

சமந்தாவுக்கு முன்னாள் கணவரின் ஞாபகம் வருகிறது போல… என்ன செய்துள்ளார் பாருங்க…

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சமந்தா. இவர், நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். மேலும, தென்னிந்திய சினிமாவில் இவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாகள் என்று கூறி வந்த நிலையில், இருவருடையே சில கருத்து வேறுபாடு காரணமாக தங்களது 4 வருட திருமண வாழ்வை முறித்து கொண்டதாக அறிவித்தனர்.

மேலும், இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், பிரிந்து வாழ முடிவு செய்த பிறகு இருவரும் தங்களது படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். மேலும், பிரிந்த பிறகு, சமந்தா பல படங்களில் கமிட்டி தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில், சமந்தா ‘காஃபி வித் கரண்’ என்ற எபிசோடில் நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டார். அதில், தனது முன்னாள் கணவர் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இதற்கிடையில், ஜீவனாம்சமாக சமந்தாவுக்கு ரூ.50 கோடியை நாகசை தன்யா கொடுக்க முன்வந்ததாகவும் அதற்கு சமந்தா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்பொது, நடிகை சமந்தா புது வீடு ஒன்றை வாங்கியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை சமந்தா விவாகரத்துக்கு முன்பு தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஹைதராபாத்தில் தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இதையும் படிங்களேன் – நயன்தாராவின் ஏடாகூடமான போட்டோ… விக்னேஷ் சிவன் செய்ததை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….

பின்னர், இருவரும் பிரிந்த போது, ​​வீட்டை விற்றுவிட்டனர். தற்போது, சமந்தா பல முயற்சிகளை மேற்கொண்டு அதே வீட்டை ரூ.22 கோடிக்கு கொடுத்து வாங்கியுள்ளாராம். இதனை, அறிந்த இவரது ரசிகர்கள் ஒருவேளை பிரிந்து சென்ற முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நினைப்பு வந்து விட்டதோ.? என்னவோ! என்று சமூக வலைதளத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top