நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவருமே சினிமாவுக்கு ஒன்றாக வந்த நிலையில், பல ஆண்டுகள் காதலித்து கடந்த 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். நான்கு ஆண்டுகள் காதல் ஜோடிகளாக வாழ்ந்து வந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை.
திருமணத்திற்குப் பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாகவே வலம் வந்தார். திடீரென பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்த சமந்தா எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 6 ஃபிளாப்புக்கு பிறகு விஷாலுக்கு வெற்றி கிடைத்ததா?.. மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் எவ்வளவு?
அதன் பின்னர் தொடர்ந்து நாக சைதன்யாவுக்கு சமந்தாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரிவதாக அதிரடியாக அறிவித்து ரசிகர்களை கடந்த 2021-ல் சோகத்தில் ஆழ்த்தினர்.
நடிகர் நாகசைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் வயப்பட்டு உள்ளார் என கிசுகிசுக்கப்பட்டது. அதேசமயம், நடிகை சமந்தா இன்னொரு நடிகருடன் உறவில் உள்ளார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் பரவின.
இதையும் படிங்க: செஞ்ச தப்புக்காக வாத்தியாரா மாறின சூரி!… அதெப்படி திமிங்கலம் முடியும்…
ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தீவிரமாக தனது மகனுக்கு பெண் பார்த்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக குஷி படத்தை முடித்த சமந்தா அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உம்மா கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அங்க உன் புருஷன் புதுக் கல்யாணம் பண்ணப் போறாராம் நீ இங்க யாருக்கு உம்மா கொடுத்துட்டு இருக்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…