ஷூட்டிங்கில் சமந்தா விபத்து – பொய்யான தகவல்.! புது புயலை கிளப்பிய ‘அந்த’ நபர்.!

Published on: May 24, 2022
samantha
---Advertisement---

தென்னிந்திய திரையுலகில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் சமந்தாவும்,  அர்ஜுன் ரெட்டி , கீதா கோவிந்தம் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார் என்றவுடன் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது.

ஆக்சன் – காதல் திரைப்படமாக ‘குஷி’ எனும் பெயரில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போது கார் விபத்துக்குள்ளாகி, சமந்தா , விஜய் தேவரகொண்டா இருவரும் காயமுற்றனர்.

அதனால் இருவரும், மருத்துவமனை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர் என்கிற செய்தி  நேற்று முழுவதும், வைரலாக பரவியது. இந்த செய்தி அறிந்தவுடன் இருவரது ரசிகர்களுக்கும் பதற்றத்தில் இருந்தனர்.

இதையும் படியுங்களேன் – சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படத்திற்கு வந்த சோதனை.!? தெறித்து ஓடிய சன் பிக்ச்சர்ஸ்.! 

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமா PRO ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்திகள் தவறானது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.  அவர்கள் இருவருமே 30 நாட்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பத்திரமாக நேற்று ஹைதிராபாத் வந்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

சமந்தா – விஜய் தேவரகொண்டா விபத்து உண்மையா அவர்கள் மருத்துவ சிகிச்சை உண்மையா என்பதை அந்த படக்குழுவே உறுதிப்படுத்தினால் மட்டுமே தெரியவரும்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment