டைட் டிஷர்ட்டில் சமந்தா!.. சைலன்ட்டா மும்பையில் என்ன பண்றாருன்னு பாருங்க.. வைரலாகும் வீடியோ!..

நடிகை சமந்தா அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார் என்றும் ஒரு வருஷத்துக்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி படத்தின் புரமோஷனுக்காக அடுத்த நொடியே கலந்து கொண்டு கலக்கினார் சமந்தா.

ஆனால், அந்த படத்தின் புரமோஷன் முடிந்த உடனே மீண்டும் அமெரிக்காவுக்கு பறந்து விட்டார். இந்நிலையில், சமந்தா பட புரமோஷனுக்கு மட்டும் தான் வந்தார் என்றும் அவர் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார் என கூறப்பட்ட நிலையில், ஜிம் டிரெய்னருடன் வொர்க்கவுட் செய்து வரும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க:ஒன்னு ஒன்னா கிழிக்க வேண்டாம்! மொத்தமா கிழிச்சா போதும் – லியோ பட தயாரிப்பாளருக்கு வாய் பூட்டு போட்ட தளபதி

இந்நிலையில், அதற்கெல்லாம் ஹைலைட்டாக நடிகை சமந்தா மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் நகரில் ரசிகர்களுடன் சந்தித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

வருண் தவான் உடன் சிட்டாடல் இந்தி வெப்சீரிஸில் நடித்து வரும் சமந்தா அதற்காக மும்பை வந்தாரா? அல்லது அடுத்த இந்தி படத்தில் நடிக்கப் போகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் தற்போது கிளம்பி உள்ளன.

ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு டைட் டிஷர்ட் அணிந்து கொண்டு ரசிகர்களை சந்தித்த சமந்தா அவர்களுடன் செல்ஃபி புள்ள போல சில செல்ஃபிக்களையும் எடுத்துக் கொண்டு காரில் ஏறி கிளம்பி சென்று விட்டார்.

இதையும் படிங்க: யோகிபாபுவை புறக்கணித்த சிவகார்த்திகேயன்.. பின்ன யாரா இருந்தா என்ன?!.. அடிச்ச அடி அப்படி!

நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வெடுக்கவில்லை என்றும் அடுத்தடுத்த படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க பாலிவுட்டிலேயே டென்ட் அடித்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து நடித்த குஷி திரைப்படத்தில் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆன நிலையில், கதை கவனத்தை ஈர்க்காத நிலையில் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது. இந்நிலையில், சமந்தாவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/Cy0gQFuNASv/?utm_source=ig_web_copy_link

 

Related Articles

Next Story