2வது வாரத்திலும் சமந்தாவின் சாம்ராஜ்யம்!.. 'எங்கள் தங்கம்' உலகளவில் 100 கோடி வசூல் வருமா?

 
saman

நடிகை சமந்தா தயாரித்து நடித்து வெளியான 'மா இண்டி பங்காரம்' தமிழில் ’எங்கள் தங்கம்’ என வெளியான  திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான 8-வது நாளில் படத்தின் வசூல் குறித்த தகவல்களும், 100 கோடி வசூலை இந்த வாரம் தொடுமா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளை வெளியிடும் Sacnilk தகவலின்படி, 8-வது நாளில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.4.65 கோடி நெட் வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் மொத்த வசூல் ரூ.40.50 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், இந்தியா மற்றும் வெளிநாட்டு வசூலை சேர்த்து உலகளவில் சுமார் ரூ.73 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

மொழிவாரியாக பார்க்கும்போது, தெலுங்கு பதிப்பு அதிகபட்சமாக ரூ.4.40 கோடி வசூலித்துள்ளது. அதேசமயம், தமிழ் பதிப்பு ரூ.0.25 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளது.

2023-ஆம் ஆண்டு வெளியான 'குஷி' திரைப்படத்திற்குப் பிறகு சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'மா இண்டி பங்காரம்' ஆகும். இதற்கு முன்பு அவர் 'சிட்டாடெல்: ஹனி பன்னி' வெப் தொடரில் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்தப் படத்தை நந்தினி இயக்கியுள்ள நிலையில், ராஜ் நிடிமோரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ஆகியோர் இணைந்து ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர். ஒம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வசந்த் மாரிங்கண்டி கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ள நிலையில், பல்லவி சிங் ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.

முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ள 'மா இண்டி பங்காரம்' இரண்டாவது வார இறுதியில் வசூலை மீண்டும் அதிகரிக்குமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

25 கோடி பட்ஜெட்டில் வெளியான சமந்தாவின் படம் 73 கோடி வசூலை கடந்த நிலையில், அடுத்த வார இறுதிக்குள் 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web