தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தவிர தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க பிள்ளையார் சுழி போட்டு வருகிறார். தமிழில் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சாகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளது. காரணம் அந்த போஸ்டரில் மான்கள் மற்றும் மயில்கள் புடைசூழ அழகு தேவதையாக சமந்தா காட்சி தருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சமந்தா இயக்குனர்கள் ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக சுமார் 3 கோடி ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படி தொடர்ந்து பல படங்களில் சமந்தா பிசியாக நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுடனும் அவ்வபோது உரையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், பிட்னஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர என்ன காரணம்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த சமந்தா, “நான் உங்களுக்கு பெரிய ரகசியத்தை சொல்கிறேன். நான் ஜிம்மிற்கு போக ஆரம்பித்ததே நாக சைதன்யாவை பார்ப்பதற்காக தான். நாகசைதன்யா எப்போதும் ஜிம்மிற்கு செல்வார். அதனால் நானும் ஜிம்மில் இனைந்தேன். அதனால் தான் எனக்கு இந்த ஆர்வம் வந்தது” என தன்னுடைய முன்னாள் கணவர் குறித்த ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…