எனக்கு இன்னொருவருடன் காதலா?...கருக்கலைப்பு செய்தேனா?... பொங்கிய நடிகை சமந்தா....
நடிகை சமந்தா - நடிகர் நாகை சைத்தன்யா திருமண முறிவு செய்திதான் தற்போது சினிமா உலகில் பேசுபொருளாக உள்ளது. அவர்களுக்குள் என்ன பிரச்சனை? இதன் பின்னணி என்ன? என பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
நாக சைத்தன்யாவுக்கு வேறு நடிகையுடன் காதல், சமந்தாவுக்கு ஒரு ஆடை வடிவமைப்பாளருடன் காதல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதது, இதன் பின்னணியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் என பல செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவில் ‘என் சொந்த பிரச்சனையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபம், பச்சாதாபம் ஆகியவற்றுக்கு நன்றி.
இதையும் படிங்க: நடிகைகளுக்கே ஃடப் கொடுக்கும் டிடி: சிவப்பு உடையில் வைரலாகும் புகைப்படங்கள்..
எனக்கு காதல் என்றார்கள், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்றார்கள், தற்போது நான் சந்தர்ப்பவாதி மற்றும் நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.
விவாகரத்தே பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளியில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஆனால், இவையெல்லாம் என்னை எந்த வகையிலும் பாதிக்காது என உங்களுக்கு சத்தியம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.