தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை சமந்தா. சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை தள்ளிவைத்து விட்டு தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
இவர் என்னதான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களுடன் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார். அதன்படி சமந்தா கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சோசியல் மீடியா மூலம் அவரது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர், “டாட்டூ வரைவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்க முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “என்னைவிட சிறியவர்களுக்கும் நான் சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால் ஒருபோதும் டாட்டூ வரையாதீர்கள். எப்போதும் பச்சைக்குத்தி கொள்ளாதீர்கள்” என மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. அது என்னவென்றால் சமந்தா அவரது உடம்பில் 3 இடங்களில் டாட்டூ வரைந்துள்ளார். அந்த மூன்று டாட்டூவுமே அவரது கணவர் நாக சைதன்யா சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதால், ஒன்றாக இருக்கும்போது வரையும் டாட்டூகள் பிரிந்த பிறகு வலியை ஏற்படுத்தும் எனும் வகையில் தான் சமந்தா இப்படி ஒரு அட்வைஸ்ஸை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…