
Cinema News
இனி அது நடக்கவே நடக்காது போல… சமந்தா என்ன செய்துள்ளார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது அழகில் மயங்காத நபர்களே கிடையாது எனும் அளவிற்கு கொள்ளை அழகில் ஜொலிக்கும் சமந்தாவின் சொந்த வாழ்க்கை ஏனோ அந்த அளவிற்கு ஜொலிக்கவில்லை.
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த இவரது காதல் கணவர் நாக சைதன்யா உடனான திருமண வாழ்க்கை வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், நாக சைதன்யா நினைவுகளை சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்.
முன்னதாக நாக சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிய சமந்தா தற்போது ஒரு பெரிய விஷயத்தை செய்துள்ளார். அதன்படி சமந்தா அவரது கணவர் நாக சைதன்யா மீது கொண்ட காதலால் அவரது முதுகில் Ye Maaya Chesave என்ற படத்தின் நினைவாக ymc என்ற டாட்டூவையும், நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றை இடுப்பில் குத்தியிருந்தார்.
தற்போது இந்த இரண்டு டாட்டூவையும் சமந்தா முற்றிலுமாக எடுத்துள்ளார். சமீபத்தில் சமந்தா நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்டில் அவரது முதுகு மற்றும் இடுப்பில் டாட்டூ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் போட்டோவை வைத்து தான் இந்த விஷயத்தை கன்பார்ம் செய்துள்ளனர்.
என்னதான் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தாலும், மீண்டும் சேர வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், தற்போது இனி அது நடக்கவே நடக்காது என்பதால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.