எல்லாத்துக்கும் பொறுமை இருக்கு...! கடுப்பான சமந்தா...காண்டில் ரசிகர்கள்..
திருமண விவகாரத்திற்கு பிறகு புஷ்பா படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்தார் நடிகை சமந்தா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சமந்தா விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்து திரைக்கு வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இப்படி திருமண பிரச்சினைக்குப் பிறகும் அவரின் வாழ்க்கை அவர் எதிர்பார்த்தப்படியே போக திடீரென ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து காண்டான ரசிகர்கள் ஏன் திடீரென சாம்ஸ் இப்படி ஒரு போஸ்டை போட்டுள்ளார் என்னாச்சு என்று ஆராய்து வருகின்றனர்.
அந்த போஸ்டில் என்னுடைய அமைதியை அறியாமை என்று எடுக்காதீங்க, அத அக்சப்ட் பண்ணிட்டேனும் எடுத்துக்காதீங்க என்றெல்லாம் ட்விட் செய்துள்ளார். ஒருவேளை நாக சைதன்யா இரண்டாவது திருமணம் குறித்து இவர் எதும் ட்விட் போட்டுள்ளாரா என்று தெரியவில்லை.
மேலும் கடைசியில் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என போட்டுள்ளார். இவரின் இந்த ட்விட்டுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவும் லைக் போட்டுள்ளார்.