ஜீவனாம்சம் ஒத்த பைசா வேணாம்... தெறிக்க விட்ட நடிகை சமந்தா....

by சிவா |   ( Updated:2021-10-02 12:12:28  )
samantha
X

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது அதை சமந்தா உறுதி செய்துள்ளார்.

samantha

தனது இன்ஸ்டாகிராமில் ‘நானும், சைத்தன்யாவும் கணவன் மனைவியாகவே பிரிய முடிவெடுத்துள்ளோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அதுதான் எங்கள் உறவின் பலம். அந்த உறவு எப்போதும் எங்களை இணைத்திருக்கும்.

இதையும் படிங்க: நானும் என் கணவரும் பிரிகிறோம்!…..நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த கடினமான நேரத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட பிரச்சனையை புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். உங்களின் ஆதரவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

samantha

இந்நிலையில், விவாகாரத்து செய்யவுள்ள நிலையில் தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதையும் சமந்தா பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. சமந்தாவுக்கு ஜீவனாம்சம் கொடுக்க நாக சைத்தன்யாவும், அவரின் குடும்பமும் முன் வந்தது. ஆனால், ‘நான் மிகவும் கஷ்டப்பட்டே இந்த நிலைமைக்கு வந்தேன்.

சில கடைகளில் வெல்கம் கேர்ள் ஆக கூட நான் பணி புரிந்தேன். என் தேவைக்கு என்னால் நடித்து பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் பணம் எனக்கு வேண்டாம். என் கண்ணாடியில் நின்று என் முகத்தை பார்த்தால் நான் என்னை அசிங்கமாக உணரக்கூடாது’ எனக் கூறினாராம். சமந்தாவுக்கு பல கோடிகளை கொடுக்க நாகார்ஜூனா குடும்பம் தயாராக இருந்தது. ஆனால், ஒத்த பைசா வேண்டாம் என ஒதுங்கியுள்ளார் சமந்தா.

பொதுவாக நடிகைகள் விவாகரத்து பெற்றால் பல கோடி நஷ்ட ஈடு கேட்பார்கள். ஆனால், சமந்தா அதை ஏனோ நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

Next Story