
Cinema News
குழந்தை பெற திட்டமிட்டிருந்த சமந்தா!.. அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சே!…
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் நாக சைத்தன்யாவிடமிருந்து பிரிந்தார். எனவே, ஊடகங்கள் இதுபற்றியே பேசின.
நாக சைத்தன்யாவுக்கு வேறு நடிகையுடன் காதல், சமந்தாவுக்கு ஒரு ஆடை வடிவமைப்பாளருடன் காதல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதது, இதன் பின்னணியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் என பல செய்திகள் வெளியானது.
ஆனால், இந்த செய்திகளை சமந்தா மறுத்தார். விவாகரத்தே பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளியில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஆனால், இவையெல்லாம் என்னை எந்த வகையிலும் பாதிக்காது என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமந்தா இந்த ஆண்டு குழந்தைப் பெறத் திட்டமிட்டிருந்தார் என சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தயாரிப்பாளர் நீலிமா குணா தற்போது தெரிவித்துள்ளார்.
நடிப்பதை விட்டு விட்டு முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாற சமந்தா திட்டமிட்டிருந்தார். ஆனால், பாவம் அதற்குள் பிரச்சனை அவரின் கையை மீறி சென்றுவிட்டது என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.