சமந்தா முன்னாள் கணவரின் புதிய ஜோடி அந்த நடிகையா?! லீக் ஆன தகவல்.!

by Manikandan |
சமந்தா முன்னாள் கணவரின் புதிய ஜோடி அந்த நடிகையா?! லீக் ஆன தகவல்.!
X

'லவ்ஸ்டோரி' மற்றும் 'பங்கர் ராஜூ' படங்களுக்குப் பிறகு வெற்றியின் உச்சத்தில் இருக்கும் நாக சைதன்யா அடுத்ததாக அமேசான் பிரைம் வீடியோ தயாரிக்கும் வெப் சீரிஸின் நடிக்கவுள்ளார்.

Naga Chaitanya

த்ரில்லர் கதைக்களமாக இருக்கும் இந்த வெப் சீரிஸ், சூர்யாவின் '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் நாக சைதன்யா வைத்து ந்த வெப் சீரிஸை எடுக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸிற்காக நாக சைதன்யா தனது உடல் தோற்றத்தை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இலங்க... இதுவரை இல்லாத ஒரு பாத்திரத்தில் நடிக்க தயாராகி வருவதாகத் கூறப்படுகிறது.

இந்த வெப் சீரிசீழ் சைதன்யா பத்திரிக்கையாளராக நடிக்கிறார் என பேசப்படுகிறது. சைதன்யா உடன் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வெப் தொடரில் மூன்று சீசன்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது. சைதன்யா மற்றும் விக்ரம் குமார் இருவரும் தற்போது தங்களின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர்.

இதையும் படியுங்களேன்- ஒரு தடவை பட்டதே போதும்.! ப்ளீஸ் வேண்டாம்.! கதறும் சூர்யா ரசிகர்கள்.!

விரைவில் இத்தொடரை தொடங்கும் உள்ள நிலையில் புரொடக்ஷன் வேலைகளை விரைவில் தொடங்கபடும் என எதிர்பாக்கப்படுகிறது.

இது தவிர, நாக சைதன்யா அடுத்து அமீர் கானின் 'லால் சிங் சத்தா'படத்தில் நடிக்கிறார், இது ராபர்ட் ஜெமெக்கிஸின் டாம் ஹாங்க்ஸ் நடித்த 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காகும். அமீர்கான் மற்றும் கரீனா கபூர் நடித்த நகைச்சுவை நாடகத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சைதன்யா ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

Next Story