சமந்தா நடக்க முடியாமல் இருக்கிறாரா? என்ன ஆனது? சீக்ரெட் பகிர்ந்த சமந்தா மேனேஜர்...

Samantha Ruth Prabhu
தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சமந்தா நடக்கக்கூட முடியாமல் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து சமந்தா மேனேஜர் கூறி இருக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழில் நாயகியாக எண்ட்ரியாவதற்கு முன்னரே ரசிகர்களிடம் ஒரு இடத்தினை பிடித்த பெருமை சமந்தாவிற்கு தான் உண்டு. கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே என்னும் தெலுங்கு படம் தான் சினிமாவில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது.

Samantha Ruth Prabhu
இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் த்ரிஷா இவர் இடத்தினை பிடித்தால் அப்படத்தில் சிம்பு இயக்கிய படத்தின் நாயகியாக சமந்தா தான் நடித்திருந்தார். அப்போதே அவர் பலரின் மனதையும் கொள்ளை அடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சமந்தாவால் தான் கல்யாணத்தை தள்ளி போடுகிறாரா த்ரிஷா… வெளியான ஷாக் தகவல்…
அடுத்ததாக பாணா காத்தாடி படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டிருந்தார். சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ச்சியாக அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார்.

Samantha Ruth Prabhu
தமிழ் மட்டுமல்லாமல் அவரின் க்ராப் தெலுங்கில் கணிசமாக உயர்ந்தது. தொடர்ச்சியாக சினிமா, வெப்சீரிஸ் என பிஸியாக இருந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வை காதலித்தார். இருவரின் காதலுக்கு ஓகே சொன்ன குடும்பத்தினர் இரு முறைப்படி அவர்களுக்கு வெகுவிமரிசையாக திருமணம் செய்து வைத்தனர். 5 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக சமீபத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா அறிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து நடிப்பில் பிஸியாக இருந்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த போஸ்ட் வைரலான நிலையில், நான் உயிரோடு தான் இருக்கிறேன் என அவர் சமீபத்தி வெளியிட்ட பேட்டி ஒன்றும் இணையத்தில் வைரலானது.

Samantha Ruth Prabhu
இந்நிலையில், சில நாட்களாக சமந்தாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. சில தரப்பு அவர் நடக்கக்கூட முடியாமல் இருப்பதாகவும் கூறினர். ஆனால் அதை சமந்தாவின் மேனேஜர் முற்றிலும் மறுத்து இருக்கிறார்.
அவர் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.