ஒரிஜினலை விட'கிக்' கொஞ்சம் அதிகமா இருக்குதே.. அந்த பாலிவுட் ஹீரோவுடன் சமந்தாவின் அசத்தல் ஆட்டம்..

by Manikandan |   ( Updated:2022-07-20 07:24:20  )
ஒரிஜினலை விடகிக் கொஞ்சம் அதிகமா இருக்குதே.. அந்த பாலிவுட் ஹீரோவுடன் சமந்தாவின் அசத்தல் ஆட்டம்..
X

இயக்குனர் கரண் ஜோஹரின் பிரபல அரட்டை நிகழ்ச்சியான காஃபி வித் கரண் சீசன் 7 -ல் தற்போது அக்‌ஷய் குமார் மற்றும் சமந்தாவும் செய்த அட்ராசிட்டிகள் நாளை வெளியாகவுள்ளது. இன்று வெளியாகியுள்ள அந்த நிகழ்வின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், புஷ்பா படத்தின் பிரபல 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு அக்‌ஷய் மற்றும் சமந்தா நடனமாடும் அந்த அழகான வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நேற்றும் இதேபோல் ஒரு வீடியோ வெளியானது அதில் சமந்தாவை அலேக்காக தூக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

கரண் ஜோஹரின் தர்மடிக் நிறுவனம் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. இந்த புதிய எபிசோட் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் மட்டுமே பார்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அக்‌ஷய் குமாரிடமும் சமந்தாவிடமும் பல்வேறு கேள்விகளை கரண் ஜோஹர் கேட்டுள்ளார், அதை நாளை பார்க்கலாம்.

இதையும் படிங்களேன்- தளபதி கொஞ்சம் பத்திரமா இருங்க.. வாரிசுவில் இணைந்த மெகா ஹிட் வில்லன்.! பதட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

இதற்கிடையில், கடந்த ஜூலை 7 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காஃபி வித் கரண் 7 திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் கடலந்துகொண்டனர். கடைசியாக சாரா அலி கான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story