Connect with us
one name different actor

Cinema History

ஒரே பேர்ல இத்தன திரைப்படமா..? – ஆனா நடிச்சது வேறு வேறு ஆளு யார், யாருன்னு தெரியுமா?

ஒரே பெயரில் திரைப்படங்கள் ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நடிகைகளின் நடிப்பில் வெளிவந்துள்ளது. அப்படி என்னென்ன திரைப்படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு பெயரில் வெளிவந்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

1973 ஆம் ஆண்டு வெளிவந்த கௌரவம் திரைப்படத்தில் நடிகையர் திலகம் சிவாஜி நடித்திருக்க அதே பெயரில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கௌரவம் திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்.

அடுத்து 1956-ல் வெளிவந்த ஆசை திரைப்படத்தில் காதல் மன்னன் ஜெமினிகணேசன் நடித்திருக்க 1995 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தில் காதல் மன்னன் அஜித் நடித்திருக்கிறார்.

one name different actor

one name different actor

காமெடி நடிகராக நம்மை சிரிப்பில் ஆழ்த்திய பழம் பெரும் நடிகரான நாகேஷ் 1968 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இதே பெயரில் 2013இல் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

1965 இல் வெளிவந்த பழனி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடிக்க 2008 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளிவந்த பழனி திரைப்படத்தில் பரத் நடித்திருக்கிறார்.

தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மற்றும் 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் ஒரே பெயரை கொண்டுள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் 1989 ஆண்டு வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம். இதே பெயரில் 2006 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்தது வேட்டையாடு விளையாடு திரைப்படம்.

one name different actor

one name different actor

மகளிரை மையப்படுத்தி மகளிர் மட்டும் என்ற திரைப்படம் 1994 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்தது அதைப்போலவே 2011 இல் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் திரைப்படம்.

1982ல் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட சகலகலா வல்லவன் திரைப்படம். இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு இதே பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது சகலகலா வல்லவன் திரைப்படம்.

கமலஹாசன் நடிப்பில் 1981 இல் வெளிவந்த டிக் டிக் டிக் திரைப்படம் இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பிலும் வெளிவந்தது டிக் டிக் டிக் திரைப்படம்.

2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம். இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு வரலாற்று காவியமாக உருவாகி வெளிவந்து சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top