Jayalalitha : விஜய் என்றாலே பிரச்சினைதான் என்பது போல் மாறிவிட்டது. அதுவும் விஜய் எப்பொழுது தனது அரசியல் அடியை எடுத்து வைத்தாரோ அதிலிருந்தே அவரை பல பிரச்சினைகள் பின் தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில் நடிகர் சித்தார்த் அவருடைய சித்தா பட புரோமோஷனுக்காக கர்நாடகா சென்ற போது அவரை சில கன்னட அமைப்பினர் விழா நடத்தவிடாமல் துரத்தி அடித்தனர். அதற்கு கன்னட நடிகர்கள் ஒரு சில பேர் கண்டனமும் தெரிவித்து மன்னிப்பும் கேட்டனர். ஆனால் தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் அமைதியாகத்தான் இருந்தார்கள்.
இதையும் படிங்க: அடேய் இதுக்கு தானா அது… இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 போட்டியாளர்கள்…
இதில் திடீரென விஜய் குரலில் ஒரு ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில் சித்தார்த்தை வெளியேற்றியது குறித்து எதிர்ப்பு தெரிவித்ததை போல் விஜய் குரலில் அந்த ஆடியோ வெளியானது. அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என்றும் அந்த ஆடியோவில் விஜய் குறிப்பிட்டதை போல் அமைந்திருந்தது.
ஆனால் உண்மையிலேயே அது விஜயின் குரல் இல்லை என்றும் போலியானது என்றும் புஸ்ஸி ஆனந்த் அந்த ஆடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இது விஜயின் ரசிகர் ஒருவர்தான் செய்திருக்க வேண்டும் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் பட டைட்டிலை உருவாக்கிய ரஜினி மகள்!.. இதுக்கா செல்லங்களா இப்படி அடிச்சிக்கிட்டீங்க!..
தான் மனதில் நினைத்ததை இந்த ரசிகர் செய்து விட்டார் என்று கூட விஜய் நினைத்திருக்கலாம். அதனால்தான் இன்றுவரை அந்த ஆடியோ பேசிய நபரின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் விஜய் தரப்பினர் இருந்து வருகின்றனர் என்று அந்தனன் கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க இதே போல் ஒரு பிரச்சினைதான் ஜெயலலிதாவுக்கும் வந்ததாம். அதாவது ஒருவர் ஜெயலலிதாவின் குரலில் பேசி உயர் அதிகாரிகளை கொலை நடுங்க வைத்திருக்கிறார். தொடர்ந்து இந்த குரல் அதிகாரிகளிடம் பேசி அவர்களை தேவையான அளவுக்கு வேலை வாங்கியிருக்கிறது.
இதையும் படிங்க: தூய்மை பாரத திட்டம்: பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்த ஈஷா தன்னார்வலர்கள்!
இது ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு தெரிய வர அந்த பேசிய நபரை கண்டுபிடித்து ஜெயலலிதா முன் நிறுத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவும் அந்த நபரை தன் குரலில் பேசி அழகு பார்த்தாராம். அதன் பின் கண்டித்து அனுப்பி வைத்தாராம்.
ஆனால் இதே அந்த நபர் ஜெயலலிதாவின் குரலில் பேசி க்ரைமில் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக தக்க தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதால் ஜெயலலிதா கண்டித்து அனுப்பிவைத்தாராம்.
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…