ஒரே ராகத்தில் அமைந்த இளையராஜாவின் இரு வேறு பாடல். இதைத் தனித்தனியாகப் பார்த்தால் உங்களால் கண்டே பிடிக்க முடியாது. வேற வேற வகையில இருக்கும். ஆனா உள்ளுக்குள்ள பார்த்தா ரெண்டு பாடலும் பின்னிப் பிணைந்த மாதிரி இருக்கும். ரெண்டுமே புகழ்பெற்ற பாடல்.
ஹம்சத்வணி ராகம். இது கேட்டாலே உருகச் செய்துவிடும். இதற்குள் 2 பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.
இதையும் படிங்க… திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்!. என்னா?!.. ஐ.டி.ரெய்டு அதிகாரிகளிடம் எகிறிய கேப்டன்!..
முதல் பாடல் பாரதிராஜாவின் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த படம் ‘கிழக்கே போகும் ரயில்’. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் சினிமாவுக்காக எழுதுன ஒரே பாடல் இதுதான்.
‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்ற பாடல். குறிப்பிட்ட காலம் கழித்து அதே சாயலில் ‘எம்புருசன் தான் எனக்கு மட்டும்தான்’ படத்தில் ஒரு பாடல் வருகிறது. இதுவும் இளையராஜா தான் இசை. விஜயகாந்த், ரேகா, சுகாசினி மற்றும் பலர் நடித்த படம். இந்தப் படத்தை இயக்கியவர் மனோபாலா. பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்தப் பாட்டைப் பாடியவர்கள் ஜெயச்சந்திரன், உமாரமணன்.
அது தான் ‘பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா, புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா’ என்ற பாடல். இந்த 2 பாடல்களுமே ரொம்பவும் பிரபலம். இந்தப் பாடல்கள் வரும்போதே நமக்கு மனசை ஈர்த்து விடும். மலர்களே நாதஸ்வரங்கள் படத்தில் இடம்பெறவில்லை.
இந்தப் பாட்டுக்கு என்ன சூழல் என்றால் காதலர்களுக்குள் திருமண கனவு வருகிறது. அதற்காக வைக்கப்பட்ட பாடல். அதே போல பூ முடித்து பாடலும் திருமண கனவுக்காக வைக்கப்பட்ட பாடல் தான். ஆனால் திருமணம் முடிந்ததும் குழந்தை பிறக்குது.
அதன்பிறகு ‘கட்டில் ஒரு பக்கம். தொட்டில் ஒரு பக்கம்’ என இருக்க ஆசைப்படும் தம்பதியர். இந்தப் பாடல்களுக்குள் இளையராஜா அவ்வளவு சுவாரசியங்களையும் செய்திருப்பார்.
‘மலர்களே’ பாடலில் நாதஸ்வரம், புல்லாங்குழல், ஸ்ட்ரிங்ஸ் இசை நம்மை கூடவே அழைத்துச் செல்லும். அதே போல பூமுடித்து பாடலில் புல்லாங்குழல், ஸ்ட்ரிங்ஸ் தான் அதிகமாக வரும்.
‘மலர்களே’ பாடலை மலேசியா வாசுதேவனும், எஸ்.ஜானகியும் அழகாகப் பாடியிருப்பாங்க. ‘ஹம்மிங்’கும் செமயாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு வரும் லாலி பாடல் ரசிக்க வைக்கும். அதே போல ‘பூ முடித்து’ பாடலில் திருமணத்தில் அய்யர் ஓதும் மந்திரத்தை இடையிசையாக பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. இது தான் ஒற்றுமை.
இதையும் படிங்க… ஆன்ட்டி ஹீரோவை பிரபலமாக்கியவர் நடிகர் திலகம் தான்… பத்மினி படத்தில் அப்படி ஒரு மோசமான வேடமா?
வேற்றுமையும் உண்டு. அது என்னன்னா ‘மலர்களே’ பாடலில் ஜானகியின் குரல் பாடலை நிறுத்தி ரசிக்க வைக்கும். அதே நேரம் ‘பூ முடித்து’ பாடலில் ஸ்ட்ரிங்ஸ் வேகமாக போகும். ஆனால் ரெண்டு பாட்டும் ஒரே டெம்போ தான். பாடகர்களின் குரல்களிலும் வெவ்வேறு ஜாலத்தைக் கொண்டு வந்து இருப்பார் இளையராஜா.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…