முத்துராமன் நடித்த படு தோல்விப்படம்!.. மீண்டும் எம்ஜிஆரை வைத்து எடுத்த தேவர்!.. ஆனால் ரிசல்ட்?..
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி இவர்கள் காலுன்றிய சமயத்தில் தனக்கே உரித்தான பாணியில் நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் நடிகர் முத்துராமன். இவரும் நாடக கம்பெனியில் இருந்தே சினிமாத்துறையில் வந்தவர். பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இவருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகை யாரென்றால் அது ஜெயலலிதா தான். மேலும் தயாரிப்பாளர்களில் கொடிகட்டி பறந்தவர் சின்னப்பா தேவர். இவர் பெரும்பாலும் எம்ஜிஆரை வைத்தே அதிக படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். எம்ஜிஅரை வைத்து அதிக படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை தேவருக்கு வந்தது.
இதையும் படிங்க : சிம்பு தாய்லாந்து போனதின் ரகசியம் இதுதானா?? வெறித்தனமா இறங்கி ஆட தயாராகும் ATMAN…
அப்பொழுது தன் மகன் தண்டாயுதபாணி பெயரில் தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்து தண்டாயுதபாணி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க திட்டமிட்டார் தேவர். அதன் மூலம் ஆரம்பித்த படம் தான் ‘தெய்வச்செயல்’. இந்த படத்தில் நடிகர் முத்துராமன் நடித்தார்.
ஆனால் படம் மோசமான தோல்வி அடைந்தது. அதன் பிறகு இதே கதையை ஹிந்தியில் எடுத்தார். அப்பொழுதே தேவரின் நெருக்கமான சிலர் மாநில மொழியில் தோல்வியடைந்த ஒரு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகும். ரிஸ்க் எடுக்கிற என்றும் பலபேர் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : சிவாஜி வைத்திருந்த 100 பவுன் எடையுடைய பேனா!.. யாரிடம் கொடுத்தார் தெரியுமா?..
ஆனால் அதையும் மீறி தேவர் ஹிந்தியில் தயாரித்து வெளியிட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு 1972 ஆம் ஆண்டும் எம்ஜிஆரை வைத்து ‘ நல்ல நேரம் ’ என்ற படத்தை தயாரித்தார் தேவர். இதில் வேடிக்கை என்னவென்றால் தெய்வச்செயல் படத்தின் கதையை சார்ந்தே தான் நல்ல நேரம் படம் அமையுமாம்.
அதையும் துணிச்சலாக அதுவும் எம்ஜிஆரை வைத்து மீண்டும் எடுத்து வெளியிட்டார். நல்ல நேரம் படம் எப்படி பட்ட வெற்றி பெற்ற படமாக அமைந்தது என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் இதில் தேவரின் துணிச்சலை தான் பாராட்ட வேண்டும். ஆரம்பத்தில் மோசமான தோல்வியை தழுவிய படத்தின் கதையை வைத்து இரு வேறு மொழிகளில் தயாரித்து வெற்றி வாகை சூடிய தேவரின் செயல் துணிச்சலுக்குரியது தான்.