ஒரே மாதிரியான கதை!.. ஒரே நடிகர்கள்.. ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி அதிக வெற்றி பெற்ற படம் எதுனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் சில நேரங்களில் வெளியாகும் படங்களின் கதையை பார்த்து சில பேர் இது என்னுடைய கதை. என் கதையை திருடி விட்டார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவருவதை பார்த்திருக்கிறோம். அதிலும் ஒரு இயக்குனர் வெவ்வேறு தயாரிப்பாளரிடம் அதே கதையை கூறி அதன் மூலமும் இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன.
இந்த நிலையில் ஒரே மாதிரியான கதையிம் அமைந்தும் ஒரே மாதிரியான நடிகர்களை இரண்டு படங்களில் நடிக்க வைத்தும் வெளியான படங்கள் 90களில் நடந்திருக்கின்றன. அந்த படங்கள் என்னவென்றால் பிரவீன் காந்தி
இயக்கத்தில் வெளியான ‘ஜோடி’ படமும் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படமும் தான்.
இரண்டு படங்களும் 1999 ஆம் ஆண்டில் தான் வெளியாகின. இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில் தான் நடந்தன. இரண்டு படங்களின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான். காதலை ஏற்பதற்காக ஹீரோவும் ஹீரோயினும் தன் இரு குடும்பத்திலும் நடத்தும் நாடகம் தான் படத்தின் ஒன் லைன் கதை.
இதையும் படிங்க : ரட்சகன் – 2வில் இவர் தான் ஹீரோ!.. மாஸ் ஹீரோவை களமிறக்க துடிக்கும் இயக்குனர்..
ஜோடி படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா. ஆனால் மற்ற நடிகர்களான நாசர், அம்பிகா , மதன்பாபு ஆகியோர் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனால் சிறு பிரச்சினைகளும் எழுந்திருக்கின்றன.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் படப்பிடிப்பில் இருந்து அம்பிகா ஜோடி படத்திற்கு நடிக்க வந்திருக்கிறார். அப்போது பிரவீன் காந்தி கதையை சொல்ல அம்பிகாவிற்கு ஒரே ஷாக்காம். அந்த படமும் இதே கதை தானே என்று நினைத்துக் கொண்டு வசந்திடம் போய் கூறிவிட்டாராம் அம்பிகா.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனை பார்த்து டிரெண்டை மாற்றிய சந்தானம்… ஓஹோ!! இதுதான் விஷயமா??
இதை அறிந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் நேராக ஜோடி படப்பிடிப்பிற்கு வந்துவிட்டாராம். உடனே பிரவீன் காந்தி ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் முதலில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள். அதன் பிறகே நாங்கள் ஜோடி படத்தை வெளியிடுகிறோம் என்று கூற படம் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜோடி படம் ஸ்கிரீன் பிளேயில் தூக்கி சாப்பிட்டு விட்டதாம். இதை கூறிய பிரவீன் காந்தி இது யார் மேலேயும் தப்பில்லை. ஆனால் இப்படி நடந்து விட்டது என்று கூறினார்.