அப்பவே அப்படி ஒரு க்ளைமாக்ஸ்!.. தணிக்கை குழு பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் எத்தனையோ குடும்ப கதைகள் வந்திருக்கின்றன. சிவாஜி காலத்தில் இருந்து அதற்கு என்றே ஆடியன்ஸ்கள் இருக்கிறார்கள். குடும்ப உறவுகள் சந்திக்கும் பிரச்சினைகள், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் என நாம் அன்றாடம் சந்திக்கும் விஷயங்கள் என ஏகப்பட்ட படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக 80களில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்த திரைப்படம் தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’. விசுவின் இயக்கத்தில் விசுவே நடித்து வெளியான படம் தான் சம்சாரம் அது மின்சாரம். அந்தப் படத்தில் கோதாவரி, லட்சுமி, ரகுவரன், மனோரமா என பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம்.
இந்தப் படத்தின் வெற்றிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்ததே படத்தின் க்ளைமாக்ஸ் தான். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த உறவுகள் இணக்கமாகி விடும். ஆனால் இந்தப் படத்தில் சற்று வித்தியாசமாக ‘உடைஞ்ச கண்ணாடி பாத்திரத்தை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது’ என்பதற்கேற்ப சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பானதாக நடைமுறைக்குப் பொருந்தி வருவதாக க்ளைமாக்ஸை வடிவமைத்திருப்பார் விசு.
அதாவது கடைசில் பிரச்சினைகள் எல்லாம் சரியானாலும் ரகுவரனும் லட்சுமியும் தனிக் குடும்பத்திற்கு குடி போவார்கள். இந்தக் க்ளைமாக்ஸை பார்த்து எஸ்.பி.முத்துராமன் படம் கண்டிப்பா ஓடாது. ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என கூறினாராம். ஏவிஎம் நிறுவனமும் அதை தான் நினைத்திருக்கிறது. ஆனால் விசு தன் பிடியில் அப்படியே இருந்திருக்கிறார்.
ஒரு வழியாக படம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட தணிக்கை அதிகாரிகள் வழக்கமாக ஒரு படத்தை பார்த்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரையும் இயக்குனரையும் அழைத்து அவர்களின் சில அபிப்ராயங்களை கூறுவார்களாம். ஆனால் வெகு நேரமாகியும் தணிக்கை அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வராமல் வெளியே ஏவிஎம் சரவணன் காத்துக்க் கொண்டிருந்தாராம்.
சிறிது நேரம் கழித்து தணிக்கை அதிகாரிகள் கூப்பிட படத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போன தணிக்கை அதிகாரிகள் எந்த ஒரு கட் சொல்லாமல் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. உடனே சரவணன் இந்த சான்றிதழை கொடுத்த நீங்கள் ஏன் இவ்ளோ நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எங்களை உலுக்கி விட்டது. அதைப் பற்றி தான் இவ்ளோ நேரம் பேசிக் கொண்டிருந்தோம் என்று கூறியிருக்கின்றனர்.
சுமார் 15 லட்ச ரூபாய் முதலீட்டில், 35 நாள்களில், ஆர்வோ கலரில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம், தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்தது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : 80களில் விட்டுப்போன உறவு!.. கமலை வைத்து ஏவிஎம் நிறுவனம் படம் பண்ணாத காரணம்?..