சார் நீங்க எங்ககேயோ போய்ட்டீங்க.! ராஜமௌலி குடும்பத்தையே நெகிழ வைத்த நம்ம சமுத்திரக்கனி.!
பாகுபலி எனும் பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்ததன் மூலம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக இருக்கிறார் ராஜமௌலி. அவரது படங்களில் நாம் நடிக்க மாட்டோமா என்று பல முன்னணி நடிகர்களே ஏங்கி போய் இருக்கின்றனர். அவரையே நமது சமுத்திரக்கனி நெகிழ வைத்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ள திரைப்படம் RRR. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி என பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியை ராஜமௌலி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உடனே சமுத்திரக்கனி சம்மதித்து எப்போது வரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ராஜமௌலி ஒரு தேதியை சொல்லி உள்ளார்.
உடனே சமுத்திரகனி அந்த தேதிக்கு ஆந்திராவிற்கு டிக்கெட் எடுத்து, ஆந்திராவில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து விட்டார். அதன்பிறகு ராஜமௌலியின் மேனேஜர் தொடர்புகொண்டு இந்த மாதிரி உங்களுக்கு டிக்கெட், ரூம் எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சமுத்திரக்கனி நான் முன்னேரே இதையெல்லாம் செய்து விட்டேன் என்று அவரை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
பிறகு என்ன சம்பளம் வேண்டும் என ராஜமௌலி, சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு, 'சார் உங்க படத்தில் நடிப்பது பெரிய விஷயம். அது எனக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கு சம்பளம் நீங்கள் எது கொடுத்தாலும் சரி தான்.' என்று சென்றுவிட்டாராம். அதன்பிறகு RRR படத்தில் நடித்ததற்காக 2 கோடி சம்பளம் சமுத்திரக்கனிக்கு கொடுத்து சமுத்திரஜக்கனியை வாயடைக்க செய்துள்ளார் ராஜமௌலி.
அதன் பின்னர் ராஜமௌலியின் மகன் ஓர் படத்தை தயாரிக்க முன்வந்துளளார். அப்போது சமுத்திரக்கனி இடம் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் சமுத்திரகனி.
இதையும் படியுங்களேன் - வெற்றிமாறனை நம்பினால் வேலைக்கு ஆகாது.! நம்ம அந்த பக்கம் போயிடுவோம்.! சோகத்தில் தனுஷ்.!
ராஜமௌலியின் மகன் சம்பளம் பற்றி கேட்கவே, உங்கள் அப்பா எனக்கு கொடுத்த தொகை மிகவும் அதிகமாக உள்ளது. அதனை உங்கள் படத்தில் நடித்து நான் கழித்து விடுகிறேன். என்று கூறி அவரை வியப்படைய செய்துள்ளார்.
இருந்தாலும், சமுத்திரகனிக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ராஜமௌலியின் மகனும் ஆச்சயப்படுத்தியள்ளார். உண்மையான உழைப்பிற்கும் நேர்மையான மனதிற்கும் கிடைத்த வெகுமதி தான் இந்த சம்பளம். என திரையுலகில் சமுத்திரக்கனியை பெருமையாக பேசி வருகின்றனர்.