Connect with us

ஒழுங்கா ஓடி போயிரு.! பிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய சமுத்திரக்கனி.! இதுதான் நடந்ததாம்.,

Cinema News

ஒழுங்கா ஓடி போயிரு.! பிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய சமுத்திரக்கனி.! இதுதான் நடந்ததாம்.,

தமிழ் சினிமாவில் கருத்து, அறிவுரை அதிகமாக கூறினால் அவர்களை பெரும்பாலும் ரசிகர்கள் ஒதுக்கிடுவிடுவது வழக்கம். ஆனால், இந்த மனிதரை மட்டும் அதற்காகவே ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அவர் தான் நம்ம சமுத்திரக்கனி.

இவர் அறிவுரை கூறியதை அண்மையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு டான் பட விழா மேடையில் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பொதுவாக நான் அறிவுரைகளை பெரும்பாலும் கேட்க மாட்டேன்.

ஆனால், சமுத்திரக்கனி சார் அறிவுரை சொன்னதும் உடனே கேட்டு விடுவேன். அவரிடம் நான் முதன் முதலாக சந்திட்டபோது, சார் நான் சினிமாவில் நடிகராக முயற்சி செய்து வருகிறேன் என்று கூறினேன். உடனே அவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு. ‘ ஓடு’ என விரட்டினர்.

இதையும் படியுங்களேன் – ரஜினிகிட்ட இத கொண்டு போகாதீங்க.! அப்புறம் தனுஷ் பட இயக்குனர் நிலைமை தான் உங்களுக்கும்.!

நான் பதறிவிட்டேன். ஒருவேளை சினிமாவை விட்டு ஓடு என கூறுகிறாரே என கொஞ்சம் தயங்கி நின்றேன்.  பிறகு தான், ‘ உடலை சரியாக கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். ஆதலால் நீ ஓடி உடலை கட்டுக்கோப்பாக வைத்திரு அப்போது தான் ஹீரோ வாய்ப்பு கிடைக்கும்.’ என கூறினார் ‘ என சமுத்திரக்கனி கூறிய அறிவுரையை டான் பட விழா மேடையில் மிகவும் கலகலப்பாக கூறினார் நம்ம பிக் பாஸ் ராஜு பாய்.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் மே மதம் 13ஆம் தேதி வெளியாக உள்ள டான் திரைப்படத்தில் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாகவும், ராஜு அப்படத்தில் சிவாவுக்கு நண்பராகவும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top