Connect with us

ஏகே – 61ல் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி…? வைரலாகும் புகைப்படம்…!

ajith_mmain_cine

Cinema News

ஏகே – 61ல் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி…? வைரலாகும் புகைப்படம்…!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மாஸா உருவாகும் படம் ஏகே – 61. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார். மேலும் சார்பட்டாபரம்பரை, கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்த ஜான்கொக்கென் நடிக்க உள்ளார்.

ajith1_cine

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக் செட் அமைத்து படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகுவதால் அதற்கேற்றாற் போல சென்னை மௌண்ட் ரோடு மாதிரியான செட்டை வடிவமைத்துள்ளனராம்.

ajith2_cine

அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஒன்று போலீஸ் மற்றொன்று வங்கி திருடனாக இருக்கலாம் என திரை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தை பற்றிய வேறு எந்தவொரு அப்டேட்ஸும் வெளியில் கசியாதவாறு இந்த படத்தின் இயக்குனர் எச்.வினோத் படப்பிடிப்பில் யாரும் மொபைல் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவு போட்டுள்ளாராம்.

aji3_cine

இது ஒரு புறம் இருக்க இந்த படத்தின் மேலும் ஒரு அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது. நடிகர் சமுத்திரக்கனி ஏகே-61ல் இணையப்போவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் இவரும் அஜித்தும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. எப்படி இருப்பினும் படதரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் வரையில் ரசிகர்கள் காத்திருக்கதான் செய்ய வேண்டும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top