இருந்தாலும் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு....! மகனுடன் சமுத்திரக்கனி செய்யும் அலப்பறை தாங்கல....
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் டிவி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாவே ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் டான் செம விருந்தாக வந்து விழுந்தது என்றே சொல்லலாம். குடும்ப பாசத்தை அப்பா மகன் உறவை எப்படி காட்டினால் மக்கள் ரசிப்பார்கள் என்று தெரிந்தே சிபி சக்கரவர்த்தி படத்தை நல்ல விதமாக நகர்த்தி வெற்றியும் கண்டுள்ளார். இவர் இயக்குனர் அட்லீயுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்து அங்கயும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை குதூகலமாக படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். சிபி சக்கரவர்த்தி படத்தில் நடித்தவர்களுக்கு விருந்தும் வைத்தார் என்ற செய்திகள் புகைப்படங்கள் வாயிலாக இணையத்தில் வைரலானது. இந்த படத்தின் வெற்றியை சிவகார்த்திகேயனும் படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிவருகின்றார்.
இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் சென்றிருந்தனர். அவர்களை பார்த்த மீடியா நண்பர்களுக்கு அதிர்ச்சிய ஏற்படுத்தியது.ஏனெனில் இருவருஅம் ஒரே விதமான் ஆடையில் வந்தது வியப்பை ஏற்படுத்தியது. படத்தில் இருக்கும் தந்தை மகன் பாசத்தை நேரிலும் காட்டியது அனைவருக்கும் ஒரு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தியது என பத்திரிக்கை நண்பர்கள் கூறினார்கள்.