நடிக்கணும்கிற ஆசையை குழிதோண்டி புதைச்சிட்டேன்!.. சமுத்திரக்கனி சொன்ன பகீர் தகவல்...
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் ஊரை விட்டு ஓடிவந்தவர் சமுத்திரக்கனி. எனவே, சினிமாவில் நுழையவேண்டும் என ஆசைப்படும் பலரும் படும் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தவர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் ஒதுங்கி பல வருடங்கள் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
சீரியல் இயக்கும் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பாலச்சந்தரின் அண்ணி என்கிற சீரியலையும் இயக்கியுள்ளார். இப்படி சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்தான் சமுத்திரக்கனி. முதலில் இயக்கிய சில படங்கள் சரியாக ஓடவில்லை. இவர் நான்கவதாக இயக்கிய நாடோடிகள் திரைப்படம்தான் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
அதன்பின் போராளி, நிமிரிந்து நில், தொண்டன், அப்பா, நாடோடிகள் 2, வினோதய சித்தம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடிக்கும் பிஸியான நடிகராக மாறிவிட்டார். அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால், நடிக்கும் ஆசையை இவர் கைவிட்ட சம்பவங்களும் இவரின் வாழ்வில் நடந்துள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பல சினிமா நிறுவனங்களில் ஏறி இறங்கினார். ஆனால், யாரும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள சமுத்திரக்கனி ‘நான் நடிக்கணும்னு முயற்சி பண்ண காலத்துல ரொம்பவும் கஷ்டப்பட்டேன். குறிப்பா 1992ல் இருந்து 94 வரைக்கும் படாதபாடு பட்டேன்.
அப்பதான் சீரியல் இயக்குனர் சுந்தர் கே விஜயனை பார்த்து என்னோட சில போட்டோலாம் அவர்கிட்ட கொடுத்தேன். போட்டோக்கு பின்னாடி இருக்க என் கையெழுத்த பாத்திட்டு இப்ப ஒரு புது சீரியல் எடுக்கப்போறேன். என்கிட்ட வந்து வேலை செய்யுறியான்னு?’ கேட்டார். எனக்கு அது சரின்னு பட்டுச்சி. ரூமுக்கு போய் நான் வச்சிருந்த 8 போட்டோவையும் கிழிச்சிட்டு இனிமேல் நடிக்குற ஆசையே இருக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன்’ என சமுத்திக்கனி கூறியிருந்தார்.
ஆனால், காலத்தின் கோலம், சமுத்திரக்கனியை சினிமா இயக்குனராக மாறி இப்போது பிஸியான நடிகராகவும் மாறிவிட்டது.
இதையும் படிங்க: இத பாத்தாச்சி.. தூங்குன மாதிரிதான்!.. கிளிவேஜ் அழகை சிறப்பா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்…