Connect with us

Cinema News

நல்லாதானே போய்கிட்டு இருக்கு.? ஏன் இந்த விபரீத முடிவு.? சமுத்திக்கனியின் பெரிய ரிஸ்க் இதுதானாம்.,

தமிழ் சினிமாவில் முதலில் இயக்குனராக அறிமுகமாகி கேப்டன் விஜயகாந்த் வைத்து எல்லாம் படம் எடுத்து விட்டு, அதன் பிறகு மீண்டும் ப்ருதிவீரனில் உதவி இயக்குநராகி, சுப்ரமணியபுரத்தில் நடிகராகி, நாடோடிகள் எனும் மெகா ஹிட் படத்தை இயக்கி முடித்தவர் இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி.

அதன் பிறகு நடிப்பு , இயக்கம் என இரு துறைகளிலும் ஒரே நேரத்தில் பயணித்து வந்தார் சமுத்திரக்கனி. தமிழில், அப்பா, நாடோடிகள் 2, தொண்டன் ஆகிய படங்களை இயக்கி நல்ல சமூக கருத்துக்களை கூறி வந்த சமுத்திகரகனிக்கு இயக்குனர் சமுத்திரக்கனியாக நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்த அண்மைக்கால திரைப்படம் வினோதய சித்தம்.

அவரது வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறி , கதைக்களம் அமைத்து, அதில் ஹீரோ தம்பி  ராமையா உடன் தானும் நடித்து படத்தை சிறப்பாக இயக்கி கொடுத்தார் சமுத்திரக்கனி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்களேன் – இந்த காவியங்களை கவனித்தீர்களா.? சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ..,

தற்போது இந்த படத்தை தெலுங்கில் அவரே இயக்க உள்ளராரம். ஹீரோ பெயரை கேட்டால் தான் ஆடி போய்விடுவீர்கள். ஹீரோ பவன் கல்யாண். ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை ரீமேக், ஐயப்பனும் கோஷியும் ரிமேக் படங்களில் நடித்து அந்த பட கதைக்களத்தையே மாற்றி அதனை மாஸ் ஹீரோ கதைக்களமாக அமைத்து  அவரது ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஹிட் கொடுத்து வருகிறார்.

சமுத்திரக்கனி ஓர் நீளமான கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். தம்பி ராமையா தான் ஹீரோ. தெலுங்கில், சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தான் பவன் கல்யாண் நடிக்கிறாராம். அப்படியானால் அவருக்கான மாஸ் காட்சிகள் தான் அதிகமாக வரும். படத்தின் களமே மாறும் சூழல் வந்துவிடும். வினோதய சித்தம் படம் தெலுங்கில் எப்படி வரப்போகிறதோ என்ற ஏக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top