சமுத்திரக்கனியை பார்த்து தெறித்தோடும் பிரபல நடிகை...! என்னத்த செஞ்சாருனு தெரியலையே..

by Rohini |
sam_main_cine
X

நடிகர் நகுலுக்கு பிரேக் கொடுத்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா.. முதல் படமே செம ஹிட் அடிக்க அவருக்கு வாய்ப்புகள் மளமளமென குவிந்தது. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். அதில் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை ஆகிய திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் பேசும்படி அமைந்தது.

sam1_cine

எனவே தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தார். யோகிபாபுவுடன் இணைந்து அவர் நடித்த ‘டிரிப்’ திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

sam2_cine

மேலும் தெறி படத்திலும் விஜக்கு பொண்ணு பார்க்கும் அந்த 3 நிமிட காட்சியிலும் நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளியான சில்லு கருப்பட்டி படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரொமான்டிக் கலந்த அந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு இணையாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

sam3_cie

ஆனால் சுனைனா பேசும் போது சமுத்திரக்கனி ஒரு டிராக்கில் போவார், நாம் வேறொரு டிராக்கில் போய்க்கொண்டிருப்போம். அவர் விரைவாக போய்க்கொண்டிருப்பார். நாம் அப்பொழுதுதான் ஊர்ந்து வந்து கொண்டிருப்போம்.ஆனால் அவரை பார்க்கும் போது பயமாக இருக்கும். இந்த படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சீனில் வாக்குவாதம் வரும். அந்த சீனில் அவர் நடிப்பை பார்த்ததில் இருந்து பயமாக இருக்கும் என கூறினார். அந்த அளவிற்கு மனுஷன் தன் திறமையை காட்டி சுனைனாவை பயமுறுத்தி வைத்துள்ளார்.

Next Story