மூன்று சீரீயல்களை இயக்கிக்கொண்டிருந்த சமுத்திரக்கனி… திடீரென வந்த ஃபோன் கால்… அதுக்கப்புறம் நடந்ததுதான் விஷயமே!
சமுத்திரக்கனி தொடக்கத்தில் இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தார். அந்த சமயத்தில் பாலச்சந்தர் பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக்கொண்டிருந்தார். அதன் பின் சமுத்திரக்கனியும் பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார்.
அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி, “உன்னை சரணடைந்தேன்”, “நெறஞ்ச மனசு” ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இத்திரைப்படங்கள் சரியாக போகவில்லை. ஆதலால் மீண்டும் சீரியல்களை இயக்கத்தொடங்கினார் சமுத்திரக்கனி. அப்போது அவருக்கு தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் சசிக்குமார். “அண்ணே, நீங்க சினிமாவுல நடிக்கனும்ன்னுதானே வந்தீங்க. இப்போ அதுக்கான நேரம் வந்தாச்சு” என கூற, அதற்கு சமுத்திரக்கனி, “இப்போ நான் மூணு சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதை எல்லாம் விட்டுட்டு எப்படி நடிக்க வரமுடியும்” என கூற, அதற்கு சசிக்குமார், “சரிண்ணே, நீ எப்போ வேணும்ன்னாலும் வா. ஆனால் உன்னோட முடியை மட்டும் வெட்டிடாத” என கூறினாராம்.
எனினும் சமுத்திரக்கனி தனது மனைவியிடம்,”நான் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு” என கூற, அதற்கு அவரது மனைவி, “இப்போ வாழ்க்கை நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு” என கூறியுள்ளார். அதற்கு சமுத்திரக்கனி, “வாழ்க்கை நல்லாத்தான் போகுது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் ஒரு வட்டத்துக்குளேயே சுத்திகிட்டு இருக்கிறது” என கூற, சமுத்திரக்கனியின் மன ஓட்டத்தை அறிந்துகொண்ட மனைவி, கணவனின் விருப்பத்திற்கு வழிவிட்டார். அவ்வாறு அவர் நடித்த திரைப்படம்தான் “சுப்ரமணியபுரம்”. இத்திரைப்படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி மிக பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.