எச்.வினோத்துக்கே தெரியாது!.. போலீஸ் டிரெஸ மாட்டுனதுமே ஷாக் ஆன சமுத்திரக்கனி!.. அப்போ படமும் தாறுமாறு ஹிட் தான்!..

samuthirakani vinoth
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘துணிவு’. படம் பொங்கல் ரிலீஸாக வருகிற 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகக்கூடிய துணிவு படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தில் அஜித்தோடு மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி, அமீர் , பாவ்னி, சிபி, போன்ற முக்கியமான நடிகர்கள் அவரவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டிரெய்லர் வெளியாகி ஓரளவு என்னென்ன கதாபாத்திரங்கள் என்று தெரிந்து விட்டது. மேலும் படத்தை பற்றிய சில விஷயங்களையும் பேட்டிகளின் மூலம் கூறிவருகின்றனர்.

samuthirakani vinoth
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு கதாபாத்திரம் படத்தை பற்றி கூறினால் ஓரளவு படத்தின் வெற்றியை யூகித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த நபர் நடிகர் சமுத்திரக்கனி. அவர் ஒரு இயக்குனரும் கூட. நல்ல நல்ல படங்களை சினிமாவிற்கு கொடுத்தவர். வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கிறார் என்றால் படம் எந்த அளவுக்கு வந்திருக்கிறது என்று அவர் கூறினால் தான் சரியாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க : “வாரிசு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான்”… ஓஹோ இதுதான் விஷயமா??
நேற்று ஒரு சேனலில் துணிவு படத்தை பற்றி சில விஷயங்களை கூறினார். படத்தில் டிஜேபியாக வரும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தயாளன்’. ஏற்கெனவே தயாளன் என்ற பெயரில் சாட்டை , அப்பா போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் சமுத்திரக்கனி. சூட்டிங்கில் போலீஸ் டிரெஸ் கொடுக்கும் போது அதை உடுத்திக் கொண்டு பார்த்த போதுதான் தெரிந்தது அதில் தயாளன் என்ற பெயர் எழுதியிருந்தது.

samuthirakani
அதை பார்த்ததுமே எனக்கு ஒரே ஷாக். என்னடா இது இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்த அதே கதாபாத்திரத்தின் பெயர் இதிலயும் இருக்கேனு, ஆனால் இது வினோத்திற்கு தெரியாது. அதன் பிறகு தான் சொன்னேன். அவர் அப்படியா என்று கேட்டார். மேலும் படம் செமயா வந்திருக்கு என்றும் தியேட்டர்ல யாரும் உட்கார்ந்து பார்க்க மாட்டாங்க என்றும் ரசிகர்களை ஃபுல் எனர்ஜியிலேயே வச்சிருப்பாரு வினோத் என்றும் கூறினார் சமுத்திரக்கனி.