அஜீத் ரொம்ப நல்லவரு...அவரு ஒதுங்கி இருக்காருன்னா அதுக்கு இதுதான் காரணம்...போட்டு உடைத்தார் சமுத்திரக்கனி

by sankaran v |
அஜீத் ரொம்ப நல்லவரு...அவரு ஒதுங்கி இருக்காருன்னா அதுக்கு இதுதான் காரணம்...போட்டு உடைத்தார் சமுத்திரக்கனி
X

Ajith, Samuthirakani

துணிவு படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பகிர்ந்து கொள்கிறார்.

அஜீத் சார் நான் மிகவும் நேசிக்கக்கூடிய மனிதர். திடீர்னு வினோத்கிட்ட இருந்து போன் வந்த உடனே தெரிஞ்சி போச்சு. போய் பார்த்ததும் ஸ்கிரிப்ட் புக் கொடுத்தாரு. படிச்ச உடனே சூப்பரா இருக்கு.

Ajith

நல்ல விஷயம்னு சொன்னேன். பணம் என்ற விஷயத்தைப் பற்றி ரொம்ப அழகா சொல்லிருக்கீங்கன்னு சொன்னேன். அந்த கமிஷனர் ரோல்ல நீங்க நடிக்கிறீங்கன்னாரு. ரொம்ப சந்தோஷம்டா தம்பின்னு சொன்னேன்.

எங்கிட்ட அஜீத் சார் ரொம்ப நேரமா பிட்னஸ் பத்தியே பேசிக்கிட்டு இருந்தாரு. செமபிட்டா இருக்கீங்கன்னு சொல்வாரு. சின்ன சின்ன விஷயங்களைக் கூட ரசிப்பாரு. தன்னை மாதிரியே இந்த உலகத்தைப் பார்ப்பாரு. எல்லாரும் நல்லாருக்கணும்னு நெனைக்கக்கூடிய ஒரு மனுஷன்.

இந்த பிரபஞ்சத்தை ரொம்ப பாசிட்டிவா அப்ரோச் பண்றவரு. நீங்க உண்மையா நடந்துக்கோங்க. சமூகத்தை நேசிச்சிடுங்க...அப்போ நாம யாருன்னு உணர்வாங்கன்னு நான் அடிக்கடி சொல்வேன். அதற்கு மிகப்பெரிய உதாரணமா நான் அஜீத் சாரை பார்த்தேன்.

Ajith 2

நாங்க ரெண்டு பேரும் பேசிப் பழகி ரொம்ப நாளாச்சு. ஆக்சுவலா 2003 உன்னைச் சரணடைந்தேன் படத்துக்கு அப்புறம் நான் சாரைப் பார்க்குறேன். அப்போ வெங்கட்பிரபு சார் சொன்னாரு. சாரு உன்னைப் பார்க்கணும்னு நினைக்கிறாரு.

அப்புறமா நானும் சாரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். அப்புறம் வீரம் படம் முடிச்சிட்டு வந்தாங்க. நானும் அவரும் அப்போ ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம்.

ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். 13 வருஷம் கழிச்சி பேசினோம். அதற்கு அப்புறம் பெரிய கேப்...இப்போ தான் பேசிருக்கேன். இந்தப்படத்துல அஜீத் சார் செம பிரஷ்ஷா இருப்பாரு. ஆக்சன் சீக்குவன்ஸ், பைட் எல்லாம் செமயா இருக்கும்.

அஜீத் நல்லவரு. ரொம்ப நல்லவரு. எல்லாமே அவருக்குத் தெரியும். என்ன சின்ன சின்ன விஷயங்களால ஒதுங்கி இருக்காரு அவ்ளோதான்.

Next Story