தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் என்றாலே விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான் ஆட்கள் உள்ளனர். சுதா கொங்கரா, ஹலிதா ஷமீம், கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என சட்டென சொல்லி விடலாம். அந்த வரிசையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
ஆனால், ஆண் இயக்குநர்களை போல கமர்ஷியல் மசாலா பக்கம் போகாமல் கருத்துள்ள கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து பெண் இயக்குநர்கள் கொடுத்து தங்களுக்கான தனி முத்திரையை பதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மட்டும் அத செய்யலைனா ரஜினியின் நிலைமை? ரெட் கார்டு சம்பவத்தில் உண்மையை போட்டுடைத்த பிரபலம்
இதற்கு முன்னதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய் படங்கள் எல்லாமே ஒரு வலுவான கதையை பேசிய நிலையில், இன்று வெளியாகி உள்ள ஆர் யூ ஓகே பேபி திரைப்படம் தத்தெடுப்பதில் உள்ள சிக்கல்களை விவாத ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்து ரசிகர்களுக்கு காட்டி உள்ளது.
பெரிய செல்வந்தரான சமுத்திரகனிக்கும் அவரது மனைவி அபிராமிக்கும் (விருமாண்டி) குழந்தைபேறு இல்லை. பார்க்காத மருத்துவர்கள் இல்லை. செலவு செய்யாத காசு இல்லை. ஆனால், எந்தவொரு பலனும் இல்லை.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானால் பறிபோன படவாய்ப்பு.. காலை வாரிய துருவ் விக்ரம்.. ஹிட்டு கொடுத்தும் புலம்பும் இயக்குனர்…
இன்னொரு பக்கம் குழந்தையை பெற்று விட்டு குடும்ப சூழல் காரணமாக அதை வளர்க்க முடியாமல் விற்க நினைக்கும் இளம் பெண் சமுத்திரகனியிடம் காசு வாங்கிக் கொண்டு அந்த குழந்தையை விற்று விடுகிறார்.
ஆனால், கொஞ்ச நாட்கள் கழித்து தன்னை கர்ப்பமாக்கியவனை பிரியும் சூழலில் தனக்கு ஆதரவாக தன் குழந்தை இருந்தால் நல்லா இருக்குமே என நினைக்கும் அந்த பெண் தனது குழந்தையை பெற போராடுவதும், தங்கள் குழந்தையாக வளர்க்க தொடங்கிய சமுத்திரகனியும் அபிராமியும் அந்த குழந்தையை திருப்பி தர மறுக்க என்ன ஆகிறது என்கிற கதையை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
இதையும் படிங்க: சினிமாவிற்கு முழுக்கு போட்ட பத்மினி…. தனது பாடல் மூலம் பழி வாங்கிய கண்ணதாசன்…
இந்த படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போலவே சொல்லாததும் உண்மை எனும் நிகழ்ச்சியின் நடுவராக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வருகிறார். மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை, வழக்கு செல்லும் போக்கு என ஏகப்பட்ட டீட்டெய்லிங்கை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கொடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
ரசிகர்களை கவரும் கமர்ஷியல் மசாலா இல்லாதது குறையாக இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதையை சரியான நேர்கோட்டில் சொல்லி அப்ளாஸ் அள்ளுகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
ஆர் யூ ஓகே பேபி – தாய்ப்பாசம்
ரேட்டிங்: 2.75/5
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…