நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ்த் திரை உலகில் இப்போது தவிர்க்க முடியாத நடிகராகி வருகிறார். இயக்குனராக இருந்ததை விட நடிகராக இருக்கும்போது ரொம்ப பிசியாகி விட்டார்.
தன்னோட வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்கமுடியாத திரை உலக அனுபவங்களில் சிலவற்றை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
இதையும் படிங்க… ‘தல’யோட வார்த்தைக்காகத்தான் வெயிட்டிங்! புது குண்டா தூக்கிப் போட்ட எச்.வினோத்
விசாரணை படம் முடிஞ்சதும் வடசென்னை பட வேலைகள் நடக்கு. நான் போறேன். ‘சார்’னு கேட்குறேன். ‘நீங்க இல்ல’ன்னு சொல்றாரு. ‘சரி ஓகே’ன்னு நான் போயிட்டேன். அப்போ தான் ‘தொண்டன்’ படம் எடுக்கறேன்.
நம்மளே டைரக்ட் பண்ணி நம்மளே ஆக்ட் பண்ணுவோம்னு பண்றேன். பட வேலைகள் நடக்கும்போது தான் வடசென்னைக்கு வெற்றிமாறன் சாருக்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. சூட்டிங் எல்லாம் நிப்பாட்டிட்டு அங்கு போய் நடிக்கிறேன்.
வடசென்னை படத்துல குணா கேரக்டர் வந்து முதல்ல ‘நீங்க இல்ல’ன்னு சொன்ன அன்னைக்கு முழு கதையும் சொல்றாரு. சொல்லிட்டு நீங்க இல்லன்னாரு. அப்படியே பார்த்தேன். இதை யாரு பண்ணப் போறான்னு பார்த்தேன். அது நமக்கே வந்தது. அது இறைவன் அருள்.
நம்ம ஊருல கெட்ட வார்த்தையைத் தான் நல்ல வார்த்தையா பேசுவோம். மதுரையை எடுத்துக்கிட்டீங்கன்னாலே ஒரு கெட்ட வார்த்தையைப் போட்டுத்தான் அடுத்த வார்த்தையவே ஆரம்பிப்பாங்க. அது கெட்ட வார்த்தை கிடையாது. அன்பின் வெளிப்பாடு. இதுலயும் அப்படித்தான். எனக்கு மெட்ராஸ் பாஷையே வராது. ஒரு கெட்ட வார்த்தையை சொல்றதுக்கு 40 நிமிஷமா நான் சொல்லிக்கிட்டே இருந்தேன்.
சார் என்ன சொல்வாருன்னா டப்பிங் செட்ல ‘ஆ…ன்.. சொல்லுங்கம்பாரு’. அந்த வார்த்தையை இப்ப சொல்ல முடியாது. நான் சொல்லிக்கிட்டே இருப்பேன்.
இப்படித்தான் ஒவ்வொண்ணும் வந்தது. அது கெட்ட வார்த்தை கிடையாது. கெட்ட வார்த்தைன்னு நம்மளா வச்சிக்கிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…