சமுத்திரக்கனியை அசிங்கப்படுத்திய நடிகை.. எப்படி பழி வாங்கினார் தெரியுமா?...
திரையுலகை பொறுத்தவரை அவமானம், அசிங்கப்படுவது என்பது பலருக்கும் நடக்கும். வளரும் நிலையில் நடிகர்கள், இயக்குனர்கள் என எல்லாருமே சில அவமானங்களை சந்திப்பார்கள். சிலர் சரியான நேரம் வரும் போது பழிதீர்த்துவிடுவார்கள். ஆனால், சிலர் வெற்றிப்படங்களை கொடுத்து அதையே பதிலாக கொடுப்பார்கள்.
சினிமா ஆசையில் அப்பாவின் அறிவுரையை மீறி சென்னைக்கு வந்து பாலத்தின் கீழ் படுத்து உறங்கி பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தவர்தான் சமுத்திரக்கனி. பல இயக்குனர்களின் இயக்கத்தில் உருவான படங்களில் இவர் வேலை செய்துள்ளார். பாலச்சந்தர் தயாரித்த சீரியலையும் இவர் இயக்கியுள்ளார். அதன்பின்னர்தான் இவருக்கு சினிமாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சமுத்திக்கனி ரசிகர்களால் கவனிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த திரைப்படம் அவர் இயக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படம்தான். இப்படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடிப்பதற்கு ஒரு நடிகை வந்திருந்தார். அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில்தான் பேசியுள்ளார்.
ஆடிஷனில் கலந்து கொண்ட அவர் அதன்பின் படக்குழுவினரை தொடர்புகொள்ளவில்லை. இதுபற்றி சமுத்திரக்கனி விசாரிக்க சொல்ல ‘இயக்குனருக்கு ஆங்கிலமே தெரியவில்லை. அவர் எப்படி என்னிடம் காட்சிகளை சொல்வார்?. இந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை’ என அந்த நடிகை சொல்லிவிட்டாராம்.
ஒரு நடிகையிடம் ஒரு காட்சியை விளக்கி நம்மால் நடிக்க வைக்க முடியவில்லை எனில் நாம் எதற்கு சினிமாவில் இருக்க வேண்டும் என சமுத்திரக்கனிக்கு அவமானமாக போய்விட்டதாம். அப்போதுதான் அபிநயாவின் புகைப்படத்தை சமுத்திரக்கனி பார்த்துள்ளார். இவர் மாடலிங் துறையில் இருக்கிறார். நடிக்கவும் ஆர்வம் உண்டு. ஆனால், இவரால் வாய் பேச முடியாது என்கிற தகவல் சமுத்திரக்கனியிடம் சொல்லப்பட, இந்த பொண்ணுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து நான் நடிக்க வைத்து காட்டுகிறேன்’ என சவால் விட்டு அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
அபிநயா வெறும் வாயை மட்டும் அசைத்து நடிப்பார். அவருக்கு ஒருவரை டப்பிங் பேச வைத்து அவரை சிறப்பாக நடிக்கவைத்திருப்பார் சமுத்திரக்கனி. இப்படத்தை பார்த்த பலரும் அபிநயா வாய் பேச முடியாதவர் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள்.
அந்த படத்திற்கு பின் சசிக்குமார் இயக்கிய ஈசன் படத்திலும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு தலைப்பா!.. ரஜினியிடம் முகம் சுளித்த கமல்!.. எந்த படத்துக்கு தெரியுமா?..