Connect with us
sam

Cinema News

டபுள் கேம் ஆடியிருக்கா! சின்னப் பாப்பாவா நீ? சம்யுக்தாவை வறுத்தெடுத்த யூடியூப்பர்

சமீபகாலமாக மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாக சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இவர்களை பற்றிய செய்திதான். மாறி மாறி இருவரும் சமூக வலைதளங்களில் புகார்களை அள்ளித்தெறிக்க விட்டு வந்தனர். பிரச்சினையை நமக்குள்ளாகவே பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருந்த விஷ்ணுகாந்தை முந்திக் கொண்டு இதை பெரிய பிரச்சினையாக மாற்றியது சம்யுக்தாதான்.

அதனால்தான் நானும் பொது மக்களிடம் பேச வேண்டியதாயிற்று என விஷ்ணுகாந்த் கூறினார். மேலும் இவர்கள் பற்றிய பிரச்சினையை முதலில் சமூக வலைதளங்களில் கொண்டு வந்ததே தவறு என பிரபல டியூப்பர் அருனோதயன் கூறியிருக்கிறார். நிறைய சட்டங்கள் வந்து விட்டது. நேராக இவர்கள் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

sam1

sam1

அதுமட்டுமில்லாமல் அவர்கள் பிரச்சினையை பார்ப்பது மட்டும் தான் மக்களின் முதல் கடமையா? மீடியா முன்னாடி தன்னுடைய பெயர் பெரிய அளவில் வரவேண்டும் என்பதற்காகவே இப்படி செய்துள்ளனர் என்றும் கூறினார். மேலும் சம்யுக்தாவை பொறுத்தவரைக்கும் நல்லா டபுள் கேம் ஆடியிருக்காங்கனு தெரியுது என்றும் கூறியிருக்கிறார்.

கல்யாணத்திற்கு முன்னாடி எத்தனை பேருனாலும் வைத்துக் கொள்ளுங்கள். அது தவறில்லை. ஆனால் கல்யாணத்திற்கு பிறகும் அது தொடர்ந்து என்றால் நல்லாவா இருக்கும் என்றும் கேள்வி கேட்டுள்ளார். மேலும் முதலில் அந்த ரெக்கார்டை வெளியிட்டது என்பது மிகப்பெரிய தவறான செயல் என்றும் கூறியிருக்கிறார். ஒருவர் நல்லவரோ கெட்டவரோ உங்களை நம்பி பேசுறாங்கனா அவங்களுக்கு  உண்மையா இருக்கனும், அதவிட்டு ரெக்கார்டு பண்றது என்பது மோசமான செயல் என்றும் கூறியிருக்கிறார்.

aruno

arunodhayan

மேலும் வாயை  மூடிக்கிட்டு, அந்த மாதிரியான வீடியோஸ் பாத்துக் கிட்டு அப்படியெல்லாம் பண்ணான், காமக் கொடூரன் என்று சம்யுக்தா சொன்னது எல்லாமே வேடிக்கையா இருக்கு. ஏனெனில் அவன் ஒரு காமக் கொடூரன் என்பது ஒருவாரத்திற்கு முன்னாடி தான் தெரியுமா? ஏன்  பழகும் போது தெரிய வில்லையா? அந்த அளவுக்கு நீ சின்னப் பாப்பாவா? என்றும் சம்யுக்தாவை நோக்கி கேள்விக் கனைகளை விட்டுள்ளார். கடைசியாக மக்களிடம் இத எதையும் நம்பாதீங்க என்றும் அருனோதயன்  கூறினார்.

இதையும் படிங்க : D50 படத்தில் ஜோடியாக வில்லி நடிகையை லாக் செய்த தனுஷ்! இது வேற லெவல் அப்டேட்

google news
Continue Reading

More in Cinema News

To Top